பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
73

மூன

மூன்றாந்திருவாய்மொழி - ‘கோவை வாயாள்’

முன்னுரை

    ஈடு : 1எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் உண்டான அவன் படிகள் எல்லாம் இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்று விடாய்ப்பார் ஒருவரைப் பெறுகையாலே, இவர் உயிர் வாழ்வினையே இறைவனாகிய தனக்கு எல்லாமாம்படி இருக்கிற தன் காதல் குணத்தைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, இவரும் எல்லாம் பெற்றாராய் அனுபவிக்கிறார். சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி.

    2இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்; எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக்

_____________________________________________________

1. மேல் திருவாய்மொழிக்கும் இதற்கும் இயைபு அருளிச்செய்கிறார்,
  ‘எல்லாத்தேசத்திலும்’ என்று தொடங்கி.

      ‘சர்வேசுவரனுடைய ‘பாலனாய் ஏழுலகு’ இத்திருவாய்மொழி’ என்றது,
  ‘மேல் திருவாய்மொழியாகிய ‘பாலனாய் ஏழுலகில்’ ஆழ்வாருடைய
  காதற்குணம் சொன்னாற்போலே, இத்திருவாய்மொழியில் ஆழ்வார் பக்கல்
  சர்வேசுவரனுக்கு உண்டான காதற்குணம் சொல்லுகிறது’ என்றபடி.
  ‘நெடுமாற்கடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கடிமையும் எம்பெருமானுடைய
  நெடுமாற்கடிமையும் என இரு வகைப்படும்; அவற்றுள் எம்பெருமானுடைய
  ‘நெடுமாற்கடிமை’ இத்திருவாய்மொழி,’ என்றார் முன்னும். இரண்டாம் பத்து
  ஏழாந்திருவாய்மொழி முன்னுரை.

2. மேலே போந்த எம்பார் நிர்வாஹத்தை விரித்து அருளிச் செய்யத்
  திருவுள்ளம் பற்றி, அதனோடு வேறு நிர்வாஹங்கள் இரண்டனையும்
  சேர்த்து அருளிச்செய்கிறார், ‘இதுதனக்கு’ என்றது முதல் ‘எல்லாம்
  பெற்றாராய் அனுபவிக்கிறார் என்று அருளிச்செய்வர்’ என்றது முடிய.
  உலகத்தில் ஒருவர் ஒருவரிடத்தில் ஒன்றை விரும்பினால்,
  விரும்பப்பட்டவர்கள் விரும்பினவர்களுக்கு விரும்பிய பொருளுக்குப்
  போலியான வேறு ஒரு பொருளைக் கொடுத்து, விரும்பிய பொருளை
  மறக்கச் செய்வதும் உண்டு; அன்றி, ‘அதனையே கொடுக்கிறோம்’ என்று
  சொல்லி அவர்கள் விருப்பத்தை அடக்குவதும் உண்டு; அன்றி, அதனையே
  கையில் கொடுத்து, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதும் உண்டு; ஆக,
  இம்மூன்று வகையினையும் முறையே காட்டுகிறார், ‘எம்பார்’ என்று
  தொடங்கி. ‘வேறு ஒரு குணத்தை’ என்றது, காதற்குணத்தை.