பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
72

மல

    மலிபுகழ் வானவர்க்கு நற்கோவை ஆவர் - வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர். ‘மலி புகழ் வானவர்’ என்றதனால், 1இவ்வாழ்வாரோடு ஒப்பர்கள் ஆயிற்று அவர்களும். 2பகவானுடைய பிரிவால் விடாய்க்கைக்கு இடம் இல்லாத சமுசாரத்திலிருந்து இவர் விடாய்க்க வல்லவர் ஆனாற்போலே ஆயிற்று, பகவானோடு நித்திய அனுபவம் பண்ணாநிற்கச் செய்தே விடாய்க்க வல்லராம்படியும்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

பாலரைப்போல் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கைகழிந்த - சால
அரிதான போகத்தில் ஆசையுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ.

(32)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்!

_____________________________________________________

1. ‘மலி புகழ் வண்குருகூர்ச் சடகோபன்’ என்றும், ‘மலிபுகழ் வானவர்’ என்றும்
  அருளிச்செய்ததற்கு பாவம், ‘இவ்வாழ்வாரோடு’ என்று தொடங்கும்
  வாக்கியம்.

2. ‘எந்தத் தன்மையாலே ஒப்பாவார்கள்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘பகவானுடைய’ என்று தொடங்கி. என்றது,
  ‘பகவானுடைய பிரிவால் விடாய்க்கைக்குச் சம்பாவனையில்லாத
  சமுசாரத்திலே இருந்து இவர் விடாய்க்குமாறு போலே ஆயிற்று, நித்திய
  அனுபவம் பண்ணாநிற்கச் செய்தே அவர்கள் விடாய்க்க வல்லபடி;
  ஆகையாலே, ‘அசம்பாவிதமான விடாய் இருவர்க்கும் ஒத்திருக்கையாலே
  ஒப்பர்கள் என்கிறது’ என்றபடி. ‘நித்திய சூரிகளுக்கு விடாய்’ என்றது,
  மேலே மேலே அனுபவிக்க வேண்டும் என்னும் ஆசை.