பூசல
பூசல் அல்லது அறியார்;
ஆதலின், ‘சிலை குனித்தாய்’ என்கிறார். 1 ‘நீர் தரும யுத்தத்தில் ஆற்றல்
உள்ளவராய் இருத்தல் போன்று, இராக்கதர்கள் மாயப்போர் செய்வதில் ஆற்றல் உள்ளவர்கள் கண்டீர்,’
என்று ஸ்ரீ விபீஷணாழ்வானைப் போன்று அறிவிக்கப் பெற்றிலேன். குலம் நல்யானை மருப்பு ஒசித்தாய்
-2ஆகரத்திலே பிறந்து எல்லா இலக்கணங்களையுமுடைய குவலயாபீடத்தினுடைய கொம்பை
வருத்தம் என்பது சிறிதும் இன்றி முரித்தவனே! அவ்வளவிலே ஸ்ரீமதுரையில் உள்ள பெண்களைப் போல நின்று,
3 ‘தரையில் உள்ள இராமனுக்கும் தேரில் உள்ள இராக்கதனுக்கும் போர் ஏற்றது அன்று,’
என்று சொல்லப் பெற்றிலேன்.
பூவை வீயா நீர்
தூவி - ‘மலர்களைத் திருவடிகளிலே பணிமாறி நீரைத் தூவி’ என்னுதல்; அன்றிக்கே, ‘மலரை ஒழியாத
நீர் - மலரோடே கூடின நீர்; அதனைத் தூவி’ என்னுதல். போதால் வணங்கேனேலும் - அந்த அந்தக்
காலத்திலே பூவை வீயா நீர் தூவி வணங்கிற்றிலேன் ஆகிலும். என்றது, ‘எருது ஏழ் அடர்த்தல் தொடக்கமான
காலங்களிலே பிறந்த சிரமம் மாற, குளிர்ந்த உபசாரம் பண்ணிற்றிலேன் ஆகிலும்’ என்றபடி. பூவை
வீயாம் நின் மேனிக்கு -பூவால் அல்லது செல்லாத நின் திருமேனிக்கு. அன்றிக்கே, ‘பூவைப்பூவோடு
ஒத்த திருமேனி’ என்னுதல். என்றது, ‘மலர்ந்த மலரைப்போன்ற மிருதுத்தன்மையையுடைய திருமேனிக்கு’
என்றபடி. வீ என்பது பூவுக்குப் பேர். மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -
_____________________________________________________
1. இந்நிலையிலே இவர்
குளிர்ந்த உபசாரம் செய்யும்படியைத் திருஷ்டாந்த
மூலமாக அருளிச்செய்கிறார், ‘நீர் தருமயுத்தத்தில்’
என்று தொடங்கி.
2. ஆகரம் - பிறக்குமிடம்.
3. ஸ்ரீ ராமா. யுத்தகாண்டம்.
4. ஸ்ரீவிஷ்ணு புரா. 5
: இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா எழுதியிருக்கும்
விரிவுரை மிகமிகப் பாராட்டற்குரியது!
‘சுகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம்
ருசிராநநே
ஆவயோ : காத்ர சத்ருசம் தீயதா
மநுலேபநம்.’
‘செயற்கை வாசனையையுடைய
இந்தச் சந்தனமானது அரசர்க்கு உரியது.
எங்கள் இருவருடைய சரீரங்கட்கும் தகுந்ததான சந்தனத்தைக்
கொடுப்பாய்,’
என்பன அந்தச் சுலோகமும் அதன் பொழிப்புரையுமாகும்.
|