பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
78

1ம

1மாயா மிருகமான மாரீசன் பின்னே பெருமாள் எழுந்தருளுகிற போது இளைய பெருமாள் தெளிந்து நின்று, ‘இது மாயா மிருகம் கண்டீர்; இராக்கதர்களுடைய மாயை,’ என்றாற்போலே, நானும் அவ்வளவிலே நின்று ‘இவை அசுர ஆவேசம் உண்டு’ என்ன அன்றோ அடுப்பது? அது செய்யப்பெற்றிலேன்,’ என்கிறார்.

    மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் - ‘மதிளை உடைத்தான இலங்கைக்கு நிர்வாஹகன் அல்லனோ?’ என்று செருக்கு உற்றிருக்கிற இராவணன் முடிய வில்லை வளைத்தாய்; ‘இம்மதிளும் ஊரும் உண்டே நமக்கு,’ என்று சக்கரவர்த்தி திருமகனை எதிரிட்டவன் ஆதலின், ‘மதிள் இலங்கைக்கோ’ என்கிறார். 2சர்வ இரட்சகனான பெருமாளை விட்டு, மதிளை இரட்சகம் என்று இருந்தானாயிற்று. இது அன்றோ தான் தனக்குச் செய்து கொள்ளும் காவல்? ஆக, ‘மதிள் இலங்கைக் கோ’ என்றதனால், 3‘இராவணனால் ஆளப்படுகின்ற இலங்கை’ என்கிறபடியே, மண்பாடுதானே ஒருவர்க்கும் புகுவதற்கு அரிது; அதற்குமேலே உள்நின்று நோக்குகின்றவனுடைய வலிமையைக் கூறியபடி. இராக்கதர்கள் மாயப்போர் அல்லது அறியார்கள்; அதைப்போன்று, இவர் செவ்வைப்

_____________________________________________________

1. ‘இரண்டாவது அவதாரிகைக்குத் தகுதியாக, எருது ஏழ் அடர்த்தவிடத்தில்
  உபசாரம் செய்கையாவது யாது?’ என்ன, அதனை ஒரு திருஷ்டாந்தத்தின்
  மூலம் அருளிச்செய்கிறார், ‘மாயா மிருகமான’ என்று தொடங்கி. இதன்
  விரிவைக் கம்பராமாயணம், ஆரணிய காண்டம், மாரீசன் வதைப்படலம்,
  227 முதல் 248 முடிய உள்ள செய்யுள்களில் காணலாகும்.

2. வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘சர்வ இரட்சகனான பெருமாளை’ என்று
  தொடங்கும் வாக்கியம். ‘சேதனன் தனக்கு நன்மை பார்ப்பது போலே
  செய்யும் பாதுகாவல் இப்படி இருக்கும்கண்டீர்’ என்கிறார், ‘இதுவன்றோ’
  என்று தொடங்கி.

3. ஸ்ரீராமா. சந். 1 : 39. இங்கு,

  ‘கறங்கு கால்புகா, கதிரவன் ஒளிபுகா, மறலி
  மறம்பு காது,இனி வானவர் புகாரென்கை வம்பே;
  திறம்பு காலத்துள் யாவையுஞ் சிதையினுஞ் சிதையா
  அறம்பு காதுஇந்த அணிமதிட் கிடக்கைநின் றகத்தின்’

  என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.