New Page 1
மேலே விழ வேண்டும்படியாய்
இருந்தது உறுப்புகளின் அழகு’ என்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார். அன்றிக்கே, இடபங்களை
முன்னிட்டு, ‘இவற்றை அடர்த்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம்,’ என்று இவளை அலங்கரித்து
முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள்; ‘இவளை அணையலாமாகில் இவற்றை முரித்தல் ஆகாதோ?’ என்று
தன்னைப் பேணாதே அவற்றின்மேல் விழுந்தான் என்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார்
என்னுதல். அன்றிக்கே, ‘நம்பி மூத்த பிரான் முற்பட வந்து கிட்டின இடத்து, ‘இவன் தலையிலே வெற்றி
கிடந்தால் செய்வது என்?’ என்று வெறுப்பாலே கீழ் நோக்கிய முகத்தாளாய் இருந்தாள்; ஸ்ரீ கிருஷ்ணன்
வந்து தோன்றினவாறே பிரீதியின் மிகுதியாலே புன்முறுவல் பூத்தாள்; அப்போது அதரத்தில் பழுப்பு
இருந்தபடியைத் தெரிவிப்பார், ‘கோவை வாயாள்’ என்கிறார்’ என்னுதல். ‘அந்தப்
புன்முறுவலுக்குத் தோற்றுத் தன்னை 1அவளுக்கு ஆக்கினான்’ என்றபடி. ஏற்றின் பிடரியை
முரித்தான் ஆதலின், ‘எருத்தம் இறுத்தாய்’ என்கிறார். எருத்தம் - கழுத்து. 2அவற்றின்
செருக்கிற்குக் காரணம் கழுத்தே அன்றோ? அதனை முரித்தபடி. 3 ‘வீரராய் இருப்பார்
எதிரி கையில் ஆயுதத்தை வெறுங்கையோடு சென்று வாங்குமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ, இவன்
செய்தது? அவைதாம் தலையான ஆயுதத்தோடே அன்றோ நிற்கின்றன?
_____________________________________________________
1. ‘அவளுக்கு ஆக்கினான்’ என்றது,
‘அவளுக்கு அடிமை ஆக்கினான்’
என்றபடி.
2. ‘எருத்தம் இறுத்தாய்’ என்னாது,
‘ஏற்றின் எருத்தம் இறுத்தாய்’ என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘அவற்றின்’ என்று தொடங்கி3..
3.
'வெறுங்கையோடே முரித்தது
என்?’ என்னும் வினாவிற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘வீரராயிருப்பார்’ என்று தொடங்கி.
‘தலையான
ஆயுதம்’ என்றது, சிலேடை : தலையிலேயுள்ளதான ஆயுதம்; ஒப்புயர்வற்ற
ஆயுதம். ஆயுதம் -
இங்குக் கொம்பு.
|