|
1
1“செய்ய
வாயும் கருங்கண்ணும்’ என்று தன்னுடைய அவயவங்களைத்
தானே புனைந்துரைக்கிறாள் அல்லள்; அவன் வந்து கிட்டினபோது அவனுடைய ஸ்ரீ சகஸ்ரநாமங்களுக்கு விஷயம்
இவையே அன்றோ, அதனைச் செவியாலே கேட்டிருக்குமே, அதனாலே சொல்லுகிறாள். என்றது, தான் இழந்த
முறை சொல்லாநிற்கச் செய்தே, அவன் உகந்த முறை தோன்றாநின்றது காணும் இவளுக்கு என்றபடி.
2அவன், தனக்கு இவற்றை எல்லாச் செல்வங்களுமாக நினைத்திருந்தபடியால், இவளும்
‘உன்னது என்னது’ என்று ஒருதலை பற்றுகிறாள் ‘என்வாய்’ என்று. 3ஆத்ம ஸ்வரூபமும்
பிராப்பிய அந்தர்க்கதமாய் அன்றோ உத்தேஸ்யமாவது, இங்ஙன் அன்றாகில், “மம என்ற இரண்டு
எழுத்துகள் நாசத்திற்குக் காரணமாகின்றன. ந-மம என்ற மூன்று எழுத்துகள் மோக்ஷ பதவிக்குக் காரணமாகின்றன”
என்கிற வழியாலே பற்றுகிறாள் அன்றே என்றபடி. 4அவன் வாய்புகு சோறு
____________________________________________________
1. “செய்ய வாய், கருங்கண்”
என்று தன்னுடைய அவயவங்களைத் தானே
வர்ணிக்கலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
“செய்ய
வாயும்” என்று தொடங்கி. ‘சகஸ்ர நாமங்களுக்கு’ என்றது, அவன்
செய்யும் தோத்திரங்களுக்கு
என்றபடி.
2. “என்” என்று மமகாரம்
தோற்றச் சொல்லாமோ? என்ன. அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அவன், தனக்கு’ என்று தொடங்கி.
இவற்றை -
அவயவங்களை. ‘எல்லாச் செல்வங்களுமாக நினைத்திருந்தபடியால்’
என்றது, “செங்கனிவாய்
நுகர்ந்தானை,” “மணநோக்கம் உண்டான்”
என்பனவற்றைத் திருவுள்ளம்பற்றி. ‘உன்னது என்னது என்று’
என்றது,
உன்னுடையதாகையாலே என்னுடையது என்றபடி ஒரு தலை-ததீயத்வ
ஆகாரம்.
3. மேலதற்கு, ஸ்வாபதேசப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘ஆத்ம ஸ்வரூபம்’
என்று தொடங்கி. ‘ஆத்ம ஸ்வரூபமும் பிராப்பிய
அந்தர்க்கதமாயன்றோ
உத்தேஸ்யமாவது’ என்றது, பிராப்பியபூதனான ஈச்வரனுடைய “மதீயம் -
எனக்குரியது”
என்கிற அபிமானத்தில் அடங்கிய தான வழியாலே அன்றோ
ஆத்ம ஸ்வரூபந்தானும் “ஸ்வேநரூபேண”-என்றதில்
சொல்லுகிறபடியே
பிராப்பியமாயிற்று; ஆகையாலே, ஆத்ம தர்மமான ஞானம் பக்தி
முதலியவைகளும்
அவனுக்கு உறுப்பான வழியாலே ஆதரிக்கத் தக்கனவாம்
என்றபடி.
“த்வ்யக்ஷரஸ்து பவேத்
ம்ருத்யு: த்ர்யக்ஷரம் பிரஹ்மண: பதம்
மமேதி த்வ்யக்ஷரோ
ம்ருத்யு: நமமேதி ச சாஸ்வதம்”
இது, பகவச் சாஸ்திரம்.
4. மற்றை அவயவங்கட்கும்
நிற வேறுபாடு ஒத்திருக்க, கண்களையும்
வாயினையும் விசேடித்துக் கூறுவதற்குக் கருத்து என்? என்ன,
|