|
அடங
அடங்கி கிடக்குமவற்றை
எண்ணுகிறாள்: ‘மடல் ஊர்வேன்’ என்கிற என் வாயை நீ புதைத்தால், என் வடிவு மடல் எடுக்கிற
இதனை என் கொண்டு மறைப்பாய் என்கிறாள். முன் செய்ய மாமை இழந்து-இதற்கு மூன்று விதமாகப்
பொருள் அருளிச்செய்வர்: தன்பக்கல் கைவைப்பதற்கு முன்னே, அதாவது, பிறந்தபோதே உண்டான நிறத்தை
இழந்து என்னுதல். அன்றிக்கே, மற்றையவற்றை இழப்பதற்கு முன்னே நிறத்தை இழந்து என்னுதல்;
1முன்பு தோற்றினவற்றைப் பறித்துக் கொண்டு, பின்பே அன்றோ கிழிச்சீரையை அறுத்துக்கொள்வது;
அவன் தானும் முந்துற விரும்பியது இந்நிறத்தைக் காணும். அன்றிக்கே, முன்னே காணக் காண நிறத்தை
இழந்து என்னுதல். இப்பாசுரத்தில் ‘செய்ய மாமை’ என்கிறாள்; 2முன்னே “மணிமாமை”
என்கிறாள்; இவ்விரண்டாலும் சிவப்பும் கறுப்பும் அல்ல இங்குச் சொல்லுகிறது; இரண்டிலும் ஒருசேர
ஏறின பிரயோஜனம், ‘விரும்பத் தக்க தன்மை’ என்பதேயாகும். அவனோடு கலந்து பெற்ற நிறத்தைத்
தனமாக நினைத்திருந்தபடியால் ‘மாமை இழந்து’ என்கிறாள். மேனி மெலிவு எய்தி-நீர்ப்பண்டம்
போலே காணக்காணச் சரீரம் சருகு ஆகாநின்றதாயிற்று. 3ஆஸ்ரயம் உண்டானால் அன்றோ
தொங்குவது; ஆதலால், இனி அவன் வந்தாலும் நிறம் வந்தாலும் தொங்குகைக்கு ஆஸ்ரயம் இல்லை என்பதைத்
தெரிவித்தபடி. என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த - 4அவயவியாகத் தேடுகிறேனோ,
அவயவங்கள் தோறும் வருகிறபடி பாராயோ? என்கிறாள். இப்போது
____________________________________________________
1. மேனி மெலிவு எய்தல் தொடக்கமான
இழவுகளுக்கு முன்னே நிறம்
இழத்தற்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘முன்பு தோற்றினவற்றை’ என்று தொடங்கி. மேலதற்கே, வேறும் ஒரு
காரணத்தை அருளிச்செய்கிறார்
‘அவன் தானும்’ என்று தொடங்கி. என்றது,
தான் முதல் முன்னம் விரும்பினதாகையாலே முற்பட அபகரித்தான்
என்றபடி.
2. ‘முன்னே’ என்றது, “ஏறாளும்
இறையோனும்” என்ற திருவாய்மொழியில்
“மணிமாமை குறையிலமே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
3. ஆஸ்ரயம் - சரீரம். தொங்குவது
- தங்குவது.
4. அவயவி - சரீரி.
|