பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
99

New Page 1

பெண் தன்மையைக் கொண்டான் என்பாள் ‘என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்’ என்கிறாள். என்றது, தான் தோற்றுப் போலே காணும் இவளைத் தோற்பித்தது என்றபடி. 1என்னை நிறை கொண்டான்’ என்று இவள்தான் தோழிக்குச் சொல்லும்படி அன்றோ பண்ணிற்று. நிறையாவது, அடக்கம். அகவாயில் ஓடுகிற இது பிறர்க்குத் தெரியாதபடி மறைத்துக்கொண்டிருக்கை அன்றோ. நான் எனக்கு ஓடுகிற நிலையை உனக்கு வாய்விட்டுச் சொல்லும்படி அன்றோ செய்தது. 2தோழி தானும் இவள் வடிவிலே வேறுபாடு கொண்டு “உற்ற நன்னோய் இது தேறினோம்” என்று இவள் அகப்பட்டபடி அறியுமித்தனை போக்கி, இவள்தான் தோழிக்கும் வாய்விட்டுச் சொல்லாதபடி அன்றோ பெண்மை தான் இருப்பது. 3“என்னைப் பார்த்து ஒன்றும் வார்த்தை சொல்லவில்லை” என்னக் கடவதன்றோ. ‘நிறை கொண்டான்’ என்கிற இதனை விரித்துப் பேசுகிறாள் மேல்:

    உன்னிடத்தில் அவன் கொண்டவைதாம் யாவை? என்ன, ‘நிறைகொண்டான்’ என்ற சொல்லுக்குள்

____________________________________________________

  ‘தன்னுடைய’ என்று தொடங்கி. என்றது, எனக்குத் தாழ நின்று என்னை
  நிறைகொண்டான் என்றபடி. இதனையே விவரணம் செய்கிறார் ‘தான்
  தோற்றுப்போலே’ என்று தொடங்கி. ‘தோற்றுப்போலே என்றது, ‘யானும்
  என்னுடைய பொருளும் நீ இட்ட வழக்கு’ என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

1. துக்கத்தின் மிகுதியினாலும் இப்படிச் சொல்லக்கூடுமோ? இது, உண்மை
  என்று இவள் அறியும்படி எப்படி? என்ன, அதற்குவிடை அருளிச்செய்கிறார்
  ‘என்னை நிறைகொண்டான்’ என்று தொடங்கி.

2. ஆயின், இதற்கு முன்பு தோழிக்குத் தன் நிலையைச் சொல்லியறியாளோ?
  என்ன, ‘தோழி தானும்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  “உற்ற நன்னோய்” என்பது, திருவாய் 4. 6 : 1.

3. அப்படி அந்தரங்கர்க்கும் வாய்விட்டுச் சொல்லாதபடி செய்யுமோ பெண்
  தன்மை? என்ன, ‘என்னைப் பார்த்து’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

  “அத்ருஷ்ட பூர்வ வ்யஸநா ராஜபுத்ரீ யஸஸ்விநீ
   தேந துக்கேந ருததீ நைவ மாம் கிஞ்சித் அப்ரவீத்”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 58 : 35. மீண்டும் வந்த சுமந்திரன் தசரத
  சக்கரவர்த்தியைப் பார்த்துக் கூறுவது.