பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
106

வாயான்” என்கிறபடியே, முலைப்பாலோடே இரங்கி உயிரையும் சுரக்கும்படியாக ஆயிற்று முலை உண்டது.

    1
ஆக, இதற்கு முன்பெல்லாம், சகடாசுரனைக் கொன்றதும், பூதனையின் பாலைக் குடித்து அவளை அழித்ததும், ‘கம்சன் வரவிட்டனவற்றைப் போக்கினான்’ என்று இருந்தாள் அவள்; ‘எனக்குத் தன்பக்கலிலே ஈடுபாட்டினை உண்டாக்குகைக்காகச் செய்தான்’ என்று இருக்கிறாளாயிற்று இவள். பருவம் நிரம்பிக் காதலனாய் அதில் வல்லவனான பின்பு செய்தவை அலவோ இவளுக்குத் தன்பக்கல் ஈடுபாடு மிகைக்குச் செய்தவையாவது, பால்யத்திலே செய்தவை இவளுக்கு உடலாம்படி எங்ஙனே? என்னில், 2இவளுக்குத் தன் பக்கல் ஈடுபாட்டினை உண்டாக்குதல் அவனுக்குச் சத்தாபிரயுக்தம் என்கை. 3“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்று அவற்றை

_____________________________________________________

1. “ஊர்ந்த” என்று தொடங்கி, அவன் செய்த செயல்களைச் சொல்லி,
  “என்னை நிறைகொண்டான்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘ஆக’ என்று தொடங்கி. ‘இதற்கு முன்பெல்லாம்’ என்றது, இறைவன்
  செய்த செயல்களனைத்தும் ‘தனக்காகச் செய்தவை’ என்று இவள்
  கூறுவதற்கு முன்பெல்லாம் என்றபடி. அவள்-தோழி.

2. ‘இவளுக்குத் தன் பக்கல்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
  அவன், (மூன்றாம் பத்து ஈட்டின் தமிழாக்கம் ஈண்டுக் காண்க.) தன்
  சத்தையை (உயிரை) நோக்கித் தந்ததே காரணமாகப் பிராவண்யத்தை
  உடையவளாகிறாள் இவள் ஆகையாலே, பால்யத்தில் செய்த செயல்களும்
  பிராவண்யத்துக் காரணமாகலாம் என்பது. ‘சத்தாப் பிரயுக்தம்’ என்றது,
  பால்யம் யௌவனம் என்கிற நிலை வேறுபாடுகள் இன்றிக்கே ஸ்வரூபத்தைப்
  பற்றி நிற்பது என்றபடி. சத்தாப்பிரயுக்தம் - ஆத்மாவைப்பற்றி நிற்கும்
  தன்மை.

3. மேற்கூறிப் போந்தவற்றால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார்
  “எந்நின்ற” என்று தொடங்கி. “எந்நின்ற” என்று தொடங்கும்
  வாக்கியத்திற்குக் கருத்து, அவதாரம் தொடங்கிப் பின்பு உண்டான
  செயல்கள் எல்லாம் அடியார்களை வசீகரிக்கும் பொருட்டாக இருக்கும்
  என்பது. அவற்றை ஒழியவேயும் - அவதாரங்களை ஒழியவேயும்.

  பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்
  இந்நின்ற நீர்மை இனியா முறாமை உயிரளிப்பான்
  எந்நின்ற யோனியு மாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
  மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன்செய்யும் விண்ணப்பமே.

 
என்பது, திருவிருத்தம்.