பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
107

ஒழ

ஒழியவேயும் பின்பு செய்த காரியங்கள் எல்லாம் தனக்காகச் செய்தான் என்று இருக்கிறாள் ஆயிற்று இவள்.

    என்னை நிறை கொண்டான்1 - ஒரு செயலாலே இரண்டு பெண்களைக் கொன்றான். 2தன்னை ஆசைப்பட்டாரில் உகவாதார்க்கே நன்றாயிற்று; அவளை நற்கொலையாகக் கொன்றான், என்னை உயிர்க்கொலையாகக் கொன்றான். 3அவனுடைய செயல்களிலே ஒன்று குறைதல், நான் இழந்தவற்றிலே ஒன்று குறைய இழத்தல் செய்யில் அன்றோ நீ சொல்லுகிற வார்த்தையைக் கேட்க வல்லேனாவது. ஆகில், இத்தகைய நிலைகள் உளவானால் அவ்விஷயத்தை மறந்து உலக யாத்திரையிலே புகுந்து புறம்பு ஏதேனும் ஒன்றைக் கொண்டு போது போக்கிக்கொண்டு இருக்க வேண்டாவோ, எல்லாம் செய்தாலும் இழக்காலாவது ஒன்றோ நிறை? என்ன, 4பேர்ந்தும் பெயர்ந்தும்-போயும் வந்தும். என்றது, பிரிந்தும் கலந்தும் என்றபடி. அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்-அவன் சம்பந்தத்தையுடைய வார்த்தை அல்லது வேறு ஒரு வார்த்தையை யுடையேன் அல்லேன். 5மறக்கையாவது, நினைப்பனவற்றிலே ஒன்றாக வேணுமே நான் ஆறி இருக்கைக்கு,

_____________________________________________________

1. “நிறை” என்று அடக்கமாய், அது பெண்களுக்கு அசாதாரண
  தர்மமாகையாலே, அதனைக் கொள்ளுதல் பெண் தன்மையை முடித்தல்
  என்று கொண்டு, அதனை அருளிச்செய்கிறார் ‘ஒரு செயலாலே’ என்று
  தொடங்கி. ஒரு செயல் - பூதனையைக் கொன்ற செயல்.

2. பூதனையைக் கொன்றாற்போன்று தன்னைக் கொல்லவில்லையே, அடக்கத்தை
  அன்றோ கொண்டான்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தன்னை
  ஆசைப்பட்டாரில்’ என்று தொடங்கி.

3. “ஊர்ந்த சகடம்” என்பது போன்றவைகளையும் கூட்டிக் கொண்டு, “நிறை”
  என்பதற்கு, நிறைய அதாவது, முழுதினையும் என்று பொருள் கூறத்
  திருவுள்ளம்பற்றி, அதனை அருளிச்செய்கிறார் ‘அவனுடைய’ என்று
  தொடங்கி.

4. “பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்” என்றதன்
  கருத்து, பிரிந்தபோதொடு கலந்தபோதொடு வாசி அற அவனை ஒழிய, ஒரு
  வார்த்தை எனக்கு இல்லை என்பது. இதனால் பலித்த பொருள், புணர்ச்சிக்
  காலத்தும் பிரிவுக் காலத்தும் அவனை மறக்கப் போகாது என்பது.

5. மறக்கும்படி சொல்லுகிற தோழியைப் பார்த்து, ‘பிரிவுக்காலத்தில்
  மறக்கப்போகாது’ என்னும் இத்துணையே சொல்ல அமைந்திருக்க,
  “பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்” என்று