|
1
1“ஏது
செய்தால் மறக்கேன்” என்னக்கடவதன்றோ. 2நாட்டார், தங்கள் தங்கள் காதலர்
காதலிகளோடு கலந்த போது அவர்களை நினைத்து, பெயர இருந்தபோது அவர்களை மறந்திருப்பர்கள்,
கலந்து பிரிந்த விஷயத்தினுடைய தன்மையாலே; நான் பிரிந்த இது உலகத்தில் வேறுபட்ட பொருளாகையாலே,
பிரிந்தபோது மறக்கலாய் இருந்தது இல்லை, இனிக்கூடித்தான் பார்ப்போமோ மறக்கலாமாகில் என்கிறாள்.
3கூடினாலும் மறக்கலாமோ? என்னில், கூடின காலத்தில் மறப்பது செய்யலாமாயின் பிரிந்தபோது
மறக்கலாவதென்று வியதிரேக உக்தி. அன்றிக்கே, அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன் என்பதற்கு,
4‘அவனை மற, அவனை நினை’ என்றே நீ சொல்லுவது,
____________________________________________________
புணர்ச்சிக் காலத்தும் மறக்கப்
போகாது என்று சொல்லுதற்குக் காரணம்
யாது? என்ன, திருஷ்டாந்தார்த்தம் என்கிறார் ‘மறக்கையாவது’
என்று
தொடங்கி. என்றது, மறக்கையாவது, மற்றைய விஷயங்களை நினைத்தல்
ஆகையாலே, அநுபவிக்கிற
விஷயத்தை மறக்கையும், மற்றைய விஷயங்களை
நினைப்பதிலே ஒன்றாக வேண்டும்; அப்படி மற்றைய விஷயங்களை
நினைத்தல் உருவமான மறதி, புணர்ச்சிக் காலத்தில் இல்லாதது போன்று,
பிரிவுக் காலத்தும் இல்லை;
ஆகையாலே, அது உண்டாக வேண்டுமே நான்
ஆறியிருப்பதற்கு என்கிறாள் என்றபடி.
1. அப்படிப் புணர்ச்சிக்
காலத்தில் மறக்க ஒண்ணாமையைப் போன்று பிரிவுக்
காலத்திலும் மறக்க ஒண்ணாதோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்
“ஏது செய்தால் மறக்கேன்” என்று. இது, பெரிய திருமொழி. 9. 3 : 3.
2. பிரிவுக் காலத்தில்
மறக்கப் போகாது என்னாமல் “ஏது செய்தால் மறக்கேன்”
என்று விசேடித்ததற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
‘நாட்டார் தங்கள்’
என்று தொடங்கி.
3. பொதுவான சங்கையை
அநுவதித்துப் பரிஹரிக்கிறார் ‘கூடினாலும்
மறக்கலாமோ’ என்று தொடங்கி. வியதிரேக உக்தி -
மறுதலைச் சொல்.
4. “பேர்ந்தும் பெயர்ந்தும்
அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்”
என்பதற்கு, விலக்ஷணமான பொருளாகையாலே புணர்ச்சிக்குரிய
காலத்திற்
போலவே, பிரிவுக்குரிய காலத்திலும் மறக்க ஒண்ணாது என்று மேலே ஒரு
கருத்து அருளிச்செய்து,
புணர்ச்சிக்குரிய காலத்தோடு பிரிவுக்குரிய
காலத்தோடு வாசி அற நீ அவனை நினைப்பூட்டுகின்றவளாயிருக்கையாலும்
‘அவனை மறக்கப்போகாது’ என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘அவனை மற’ என்று தொடங்கி.
என்றது, கலவியில் அவனை நினை,
பிரிவில் ‘அவனை மற’ என்றே அன்றோ
|