பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
112

அவன

அவன் நமக்கு என்ன குறை செய்தான்’ என்ன, ஊரவர் பழி சொல்லிலும் மீளாதபடியான ஈடுபாடு உண்டான இடத்திலும் இந்நிலையில் வந்து முகங்காட்டிற்றிலன் கண்டாயே’ என்ன; அவன் இப்போது வந்து முகங்காட்டிற்றிலனாகிலும், தான் முகங்காட்டாத போதும் தன்னை ஒழிய நாம் மற்றொன்றால் பொருந்தாதபடி செய்தானே! அவன் செய்தபடி பொல்லாதோ என்கிறாள்.

    ஊரவர் . . . . . . விளைவித்த கண்ணன் 1இவை எல்லாம் செய்தாய் நீயோ. ஊரவர் கவ்வை எருவாக - 2அநுகூலம் இல்லாதவர்களை விட்டு நீங்கிய அன்று தொடங்கி ஊரவர் பழி சொல்லத் தொடங்கினார்கள் காணும். தங்களை விட்டுப் போருவதற்கு முன்னே “விபீஷணஸ்து தர்மாத்மா” என்றார்களே அன்றோ; இவன் இக்குடியில் உள்ளார்படி அல்லன், இவனுக்கு வாசி உண்டு; அந்த வேறுபாட்டினைச்

_____________________________________________________

  அவன் முகம் காட்டாதிருக்க, ஊரார் பழி முதலானவற்றாலே தன் பக்கல்
  பிராவண்யத்தை விளைத்த இவ்வளவு மாத்திரத்தைச் சொல்லுகிறதுக்குக்
  கருத்து யாது? என்ற சங்கைகளின் மேலே அருளிச்செய்கிறார் ‘“என்செய்யும்
  ஊரவர் கவ்வை” என்றாள்’ என்று தொடங்கி.

1. “ஊரவர்” என்றது முதல், “விளைவித்த” என்பது முடிய, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘இவையெல்லாம்’ என்று தொடங்கி.

2. விரையாக உருவகம் செய்த அன்பிற்குப் பின்னர் உண்டாகக் கூடிய
  ‘ஊரவர் பழியை’ விரைப்பதற்கு முன்னே இடக் கூடிய ‘எருவாக’ உருவகம்
  செய்யலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அநுகூலமில்லாதவர்களை’ என்று தொடங்கி. என்றது, சேர்க்கை உண்டானது
  கண்டு பழி சொல்லுகிறார்கள் அன்று, அவன் பக்கல் அத்வேஷம் உண்டானது
  கொண்டே பழி சொல்லுகிறார்கள் என்றபடி. அத்வேஷம்-துவேஷம் இன்மை.
  அநுகூலம் இல்லாதவர்களை விட்டு நீங்கிய மாத்திரத்தில் பழி சொன்னார்
  உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தங்களை விட்டுப்
  போருவதற்கு முன்னே’ என்று தொடங்கி.

  “விபீஷணஸ்து தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித:”

  இது, ஸ்ரீராமா, ஆரண்ய, ஸ்ரீராமனைப் பார்த்துச் சூர்ப்பணகை கூறியது.
  இங்கு, “தர்மாத்மா” என்றது, கோறல் முதலிய தீயசெயல்கள் இல்லாமை
  மாத்திரம் சொல்லுகிறது. “து” சப்தார்த்தம், ‘இவன் இக்குடியில் உள்ளார்படி
  அல்லன்’ என்பது. “தர்மாத்மா’ என்பதற்கு, சநாதன தர்மமான பெருமாளை
  ஆத்மாவாக உடையவன் என்றும் சொல்லுவார்கள்.