|
New Page 1
சொல்லுகிறது “தர்மாத்மா”
என்று. 1“மறக்குடி அறஞ் செய்யக் கெடும்” என்றதே அன்றோ. “அரக்கர்
செயலை உடையவன் அல்லன்” என்பது போன்று, ஜாதி மாத்திரமே இவன் பக்கல் எடுத்துக்கொள்ளலாவது.
2ஊரார் சொல்லுகிற பழியை இவளுடைய அன்புக்கு எருவாக இட்டான். 3ஊரார்
பழி சொல்லிற்றிலர்களாகில் இவள் தானும் கைவாங்கி இருக்குங்காணும்; என்றது, இவள், ‘மறப்பேன்’
என்னும் அன்றும் மறக்க ஒண்ணாதபடி ஊரார் நினைவினை உண்டாக்குகின்றவர்கள் தன்மையிலே நிற்பர்கள்
ஆயிற்று என்றபடி. அன்னை சொல் நீர்படுத்து-4தாயாரும் இதற்கு முன்பெல்லாம்
‘என் மகள்’ என்றே இருந்தாள், ஊரார் பழி சொல்லப்புக்க பின்பாயிற்று இவள் அறிந்தது.
தாயாருடைய ஹித வசனத்தை
____________________________________________________
1. “தர்மாத்மா” என்றால்,
அது பழியாகுமோ? எனின், அது ‘பழியேயாம்’
என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மறக்குடி’ என்று
தொடங்கி.
“மறக்குடித் தாயத்து வழிவளம்
சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கினர்
எயினரும்
கலையமர் செல்வி கடன்உணின்
அல்லது
சிலையமர் வென்றி
கொடுப்போள் அல்லள்
மட்டூண் வாழ்க்கை வேண்டுதி
ராயின்
கட்டூண் மாக்கள் கடந்தரு
மெனவாங்கு”
என்பது, சிலப். மேட்டுவ வரி.
‘மறக்குடி அறஞ் செய்யக் கெடும்’
என்பது வழக்கு.
2. “ஊரவர் கவ்வை எருவாக”
என்பதற்கு, பொருள் அருளிச்செய்கிறார்
‘ஊரார் சொல்லுகிற’ என்று தொடங்கி.
கவ்வையாற் கவ்விது காமம்
அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
என்னும் திருக்குறள், ஈண்டு ஒருபுடை
ஒப்புமை நோக்கலாகும்.
3. பழி எருவானபடி எங்ஙனே?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஊரார் பழி’ என்று தொடங்கி. என்றது, பயிர் எருவிலே
வேர் ஊன்றுமாறு
போன்று, பழியும் பிராவண்யத்தை வளர்க்கின்ற வகையாலே சொல்லுகிறார்
என்றபடி.
4. தாய் அறிந்த பின்பு
ஊரார் அறியவேண்டி இருக்க, ஊரார் பழியை,
தாயாருடைய நல்வார்த்தையாகிற நீர் பாய்ச்சுவதற்கு
முன்னே நிகழக்
கூடியதான எருவாக உருவகம் செய்யலாமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘தாயாரும்’ என்று தொடங்கி. ‘என் மகள் என்றே
இருந்தாள்’ என்றது, ‘தாயின் குணம் அன்றோ
மகளுடைய குணமும்;
ஆனபின்பு, தன்னைப் போன்றே உலக மரியாதைகளை மீறாள்’ என்றே
இருந்தாள் என்றபடி.
|