|
1ஆத
1ஆத்மாவோடு
கட்டுப்பட்டிருக்கின்ற காதல் என்றபடி. 2இங்கே ‘கடல் புரைய’ என்றது,
“கடலின் மிகப் பெரிதால்” என்னாநின்றது; 3“அதனில் பெரிய என்னவா”
என்று, ஈச்வரன்தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது; ஆக, “பொய்ந்நின்ற
ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர விளைத்துக்கொண்ட காரியம் இதுவாயிற்று. 4கைங்கர்யத்திற்கு
முன்கணத்தில் இருப்பதொன்றாய் இருக்குமே அன்றோ பரம பக்தி என்பது. 5அது உண்டாக
வேணுமே அன்றோ அவ்வருகு போம் போது; 6அங்கே போன பின்னர் அங்குள்ளாரது
ஒருபடியாய் இவரது ஒருபடியாய் இருக்க ஒண்ணாதே. 7முதலிலே மயர்வற மதிநலம் அருளினது
தன்னையே இவ்வளவாகப் பெருக்கினானாயிற்று. 8அன்றிக்கே, பெரிய
____________________________________________________
1. ‘ஆத்மாவோடு கட்டுப்பட்டிருக்கின்ற
காதல்’ என்றது, “அமர் காதல்”
என்பதற்குப் பொருள். அமர்ந்த காதல்-பொருந்தின காதல் என்றபடி.
2. “கடல் புரைய” என்ற
இது, பின்னே வருகின்ற “கடலின் மிகப்
பெரிதால்” (7. 3 : 6.) என்பது போன்றவைகளோடு
முரணாகாதோ?
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இங்கே “கடல் புரைய”
என்றது’ என்று தொடங்கி.
3. “அதனில் பெரிய என்னவா
என்று” (திருவாய். 10. 10 : 10) என்றது,
“பொய்ந்நின்ற ஞானம்” (திருவிருத்தம், 1) என்ற
திருப்பாசுரம் முதல்,
“முனியே! நான்முகனே!” (திருவாய். 10. 10 : 1) என்ற திருப்பாசுரம்
முடிய,
மேலுக்கு மேல் பக்தி விசேஷமாக விளைகையாலே முரண் ஆகாது
என்றபடி. ‘இவ்வளவும்’ என்றது,
“அதனிற் பெரிய என்னவா” என்னுமளவும்
என்றபடி. ‘இதுவாயிற்று’ என்றது, இந்தப் பக்தியையாயிற்று
என்றபடி.
4. அவன் கிருபையைச் சாதனமாகப்
பற்றின இவர்க்கு பக்தியை விளைக்கிறது
எற்றிற்கு? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘கைங்கர்யத்திற்கு’
என்று தொடங்கி.
5. மேலதற்கே வேறும் ஒரு
காரணத்தை அருளிச்செய்கிறார் ‘அது உண்டாக
வேணுமே’ என்று தொடங்கி.
6. அங்கே போனால் அது
ஆவஸ்யகமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அங்கே போன பின்னர்’ என்று தொடங்கி.
7. இப்போது விளைத்தது
யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘முதலிலே’ என்று தொடங்கி.
8. “பேரமர் காதல்” என்பதற்கு
இரண்டாவதாக வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. அமர்-அமரை:
அதாவது,
போரை. ‘போர்’ என்பது, ஆகுபெயரால் இங்குப் பூசலை உணர்த்திற்று.
|