பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
117

New Page 1

போரை விளைக்கக் கூடியதான காதல் என்னுதல். என்றது, ஊர்ப்பூசலை விளைத்த காதல் என்பதனைத் தெரிவித்தபடி. 1அன்றிக்கே, காமவேள் மன்னுஞ் சிலையாய் மலர்வாளி கோத்து எய்கிற காதல் என்னுதல். நன்று; ஈரம் என்பதற்கும், காதல் என்பதற்கும் வேறுபாடு என்? என்னில், 2“விஷயங்களை நினைக்கின்ற ஒரு மனிதனுக்கு அந்த விஷயங்களிலே சங்கம் உண்டாகிறது, அந்தச் சங்கத்தால் காமம் உண்டாகிறது, அந்தக் காமத்தால் குரோதம் உண்டாகிறது” என்கிறபடியே, அதிலே ஓர் அவஸ்தாவிசேடமாம். முன் நிலையைப் பற்ற, மேல் பிறக்கும் நிலை விசேடம் வேறு பொருள் என்னலாம்படி அன்றோ இருப்பது.

    கார் அமர் மேனி - அடியிலே எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும், மேல் மழை பெய்யாதாகில் அப் பயிர் தலை குளிர்ந்து இராதே அன்றோ; வடிவாலே ஆயிற்று மழை பெய்தது. நீர் உண்ட மேகம் போலே குளிர்ந்த வடிவு. நம் கண்ணன் - வடிவையும் தந்து தன்னையும் நமக்குத் தந்த கிருஷ்ணன். வெறும் வடிவில் பசை கண்டு அகப்படுமவள் அன்று, அகவாயில் தண்ணளியும் உண்டாக வேணுமாயிற்று. 3கிருஷ்ணன் என்றால் ‘பெண்களுக்குச் சேஷபூதன்’ என்பது பிரசித்தமே அன்றோ. தோழி-நீ தான் யாராய் இவ்வார்த்தை சொல்லுகிறாய். இரண்டும் உனக்கே பணியோ; ‘நீர்மை யுடையவன்’ என்று பொருந்த விடுகையும் உனக்கே பணியாய், ‘அருள் அற்றவன்’ என்று அகற்றப் பார்க்கையும் உனக்கே பணியாயோ இருப்பது! கடியனே - இவ்விஷயத்தில் இப்படிப் பொருந்தவிட்ட நீயே மீட்கப் பார்த்தாலும் மீளாதபடியான ஈடுபாடு உண்

_____________________________________________________

1. “பேரமர்காதல்” என்பதற்கு, மூன்றாவதாக வேறும் ஒரு பொருள்
  அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. இங்கு, அமர் - போர்.
  போரை விளைக்கின்ற காதல் என்றபடி. “காமவேள் மன்னும்” என்பது,
  பெரிய திருமடல். 43-44.

2. “த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
   ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் குரோத: அபிஜாயதே”

  என்பது, ஸ்ரீ கீதை. 2 : 62.

3. ‘கண்ணன்’ என்றால், தண்ணளி தோற்றுமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘கிருஷ்ணன் என்றால்’ என்று தொடங்கி.