|
New Page 1
போதும் நானே சொல்ல வேணுங்காண்;
1நீ மூட்டிக் கடக்க நின்றாயித்தனை போக்கி, அவனைக் கலந்து உட்புகாநின்ற என்னளவு
தெரியுமோ உனக்கு அவனை; ஆனபின்னர் அவை தம்மையும் நான் சொல்லக் கேள் என்கிறாள். 2கடியன்-கூரியன்;
தன் காரியத்திலே நோக்குள்ளவன். என்றது, தனக்கு ஒரு காரியம் உள்ளது ஆனால், எதிர்த்தலையின்
அளவு பாராதே மேல்விழுந்து வந்து கலக்குமவன் என்றபடி. கடுமை-கூர்மை. கொடியன் -3தான்
மேல் விழுந்து வந்து கலக்கச் செய்தே ‘பிரியேன்’ என்ன வல்லவன். என்றது, 4கலவியின்
மத்தியத்திலே பிரிவினை நினைத்தவன் இனிச் செய்ய மாட்டாதது ஒன்று உண்டோ? என்றது, 5“பேதை
நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான்” என்கிறபடியே, கலக்கச்செய்தே மற்று ஒன்றினை நினைக்க
வல்லவனுக்கு இனிச் செய்ய அரியது ஒன்று உண்டோ? என்றபடி. நெடிய மால்-மால் என்பது பெருமை. நெடிய
என்பது, அதன் மிகுதியைக் குறிக்கின்றது. அறப்
_____________________________________________________
1. என்னைக்காட்டிலும் அதிகமாக
நீ அறிந்தபடி என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘நீ மூட்டி’ என்று தொடங்கி.
2. “கடியன்” என்றது,
சுயகாரியப்புலி என்றபடி. ‘எதிர்த்தலையின் அளவு’
என்றது, எதிர்த்தலையின் மிருதுத் தன்மையைக்
குறித்தபடி.
எதிர்த்தலை-ஈண்டு, தலைவி.
3. “கடியன், கொடியன்” என்னும்
இரண்டும் ஒரு பொருளனவாயினும், வேறு
வேறாக அருளிச்செய்வதனாலே, “கொடியன்” என்பதற்கு, வெறுப்பிலே
நோக்காகப் பொருள் அருளிச்செய்கிறார் ‘தான் மேல்விழுந்து’ என்று
தொடங்கி.
4. ‘பிரியேன்’ என்றது, குணமாகுமேயன்றிக்
குணம் இல்லாமையாகுமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கலவியின் மத்தியத்திலே’ என்று
தொடங்கி. ‘பிரியேன்’ என்றதும், பிரிவை நினைத்தே ஆகையாலே, அது
குணம் இன்மையேயாமித்தனை
என்றபடி.
5. கலக்கிறபோது பிரியேன்
என்று சொன்னானோ? என்ன, ‘பேதை நின்னை’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘மற்று ஒன்றினை’
என்றது, பிரிவினை. ‘செய்ய அரியது ஒன்று உண்டோ’ என்றது. முகம்
காட்டாமலே
இருந்து முடித்தே விடுவான் என்றபடி.
ஏது செய்தால் மறக்கேன்?
மனமே! தொழுதும் எழு
தாது மல்கு தடம்சூழ்
பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன்
இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்
பொழில் சூழ்ந்த புல்லாணியே.
என்பது, பெரிய திரு. 9.
3 : 3.
|