|
New Page 1
பெரியவன் என்றபடி. இதனால்,
கைபுக்கு இருக்கச் செய்தேயும் அளவிட ஒண்ணாதபடி இருக்குமவன் என்கை. 1‘பிரிய நினைக்கின்றான்’
என்று அறியா நிற்கச்செய்தேயும் “சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவு” என்ன
ஒண்ணாதபடியாய் இருக்கை. என்றது, 2மேல் விழுந்து வந்து கலவாநிற்கச்செய்தே பிரிய
நினைத்தால், அதனை அறியச் செய்தேயும், ‘நீ பிரிய நினைத்தாய்’ என்று மடிபிடித்துக்
காற்கட்டி விலக்க ஒண்ணாதபடியாய் இருக்கை. உலகம் கொண்ட அடியன் - 3பிறர்
உடைமையைத் தனக்கு ஆக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் எஞ்சாதபடி செய்யுமவன்.
அவர்களைப் பின்னே பாதாளத்திலே தள்ளுமவன். 4பாதாளங் கலவிருக்கை கொடுக்குமவன்.
5ஒன்றைக் கொள்ளப் பார்த்தால், அவர்
______________________________________________________
1. தன் மேன்மை அளவிட ஒண்ணாதபடி
இருத்தலைத் திருஷ்டாந்த மூலம்
காட்டுகிறார் ‘பிரிய நினைக்கின்றான்’ என்று தொடங்கி.
காண்கின் றனகளும் கேட்கின்
றனகளும் காணில் இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்
றனஇதெல் லாமறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை
வேங்கடத் தும்பர் நம்பும்
சேண்குன்றம் சென்று
பொருள்படைப் பான்கற்ற திண்ணனவே
என்பது, திருவிருத்தம், 8.
2. “கடியன் கொடியன்” என்ற
பதங்களின் அர்த்தங்களை
அநுசந்தித்துக்கொண்டு, மேல் வாக்கியத்தை விவரிக்கிறார்
‘மேல்விழுந்து’
என்று தொடங்கி. என்றது, ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தலைமகனாகச்
சொல்லுகிற “காண்கின்றனகளும்”
என்ற பாசுரத்திலே, திருமலை
உத்தேஸ்யமாகச் செல்லுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களைப் ‘போக ஒண்ணாது’
என்று
விலக்க முடியாதது போன்று, பெருமதிப்பன் ஆகையாலே
இவனையும் விலக்க முடியாது என்பது கருத்து. மடிபிடித்து-நிர்ப்பந்தித்து.
3. உலகம் கொண்டது குணமாக
இருக்க, குணக்கேடன் என்று சொல்லுகிற
இடத்திற்குத் தகுதியாகக் கருத்து அருளிச்செய்கிறார் ‘பிறர்
உடைமையை’
என்று தொடங்கி.
4. “குறட் பிரமசாரியாய்
மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி
இறைப்பொழுதில்
பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில்”
என்பது, இங்கே அநுசந்தேயம். பெரியாழ்வார்
திருவாய்மொழி,
5. இடத்திற்குத் தகுதியாகக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘ஒன்றைக் கொள்ள’
என்று தொடங்கி. என்றது, தன்பக்கல் நிறம் தொடக்கமானவற்றில்
சிறிதும்
எஞ்சாதபடி அபகரிக்கையாலே இப்படிச் சொல்லுகிறாள் என்பது கருத்து.
|