பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
122

பிள்ளான் பணிப்பர். என்றது, 1அவன் கடியன் என்றால் அவன் கடுமை இப்போதே காணவேணும்; கொடியன் என்றால், அவன் கொடுமை இப்போதே காணவேணும்; அவன் அடைய முடியாதவன் என்றால், அவன் அடைய முடியாதவனானபடியை இப்போதே காணவேணும்; அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்பவன் என்றால், அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்ள நான் இழந்திருக்கவேணும்; அவன் அறிய முடியாதவன் என்றால், அவன் அறிய முடியாதவனாக இருக்கும் தன்மையை இப்போதே அறியவேணும் என்ற படியாம். அன்றிக்கே, என் நெஞ்சுக்கு 2மாயாவாத ருசி உண்டோ? அறிகின்றிலேன் என்பர் சீயர். என்றது, விசேஷணாம்சத்தில் தாத்பரியம் இன்றிக்கே, விசேஷ்யத்திற்கு அவ்வருகு அறிகின்றது இல்லை என்றபடி. இதனால், அவனுடைய சம்பந்தம் குணம் காரணமாக வந்தது அன்று, ஸ்வரூபத்தோடு கூடியிருப்பது என்கை. எல்லே-என்னே! இஃது ஓர் ஆச்சரியம் இருக்கும்படியே! அன்றிக்கே, ‘உன்னை மீட்க நினைத்த நான் சொன்னபடியே அன்றிக்கே ஒழிந்த பின்பு, இனி, நீ நினைத்தபடியே நினைத்திரு’ என்று போகப் புக்காள் தோழி; இங்ஙனே வாராய் என்று அவள் கையைப் பிடித்து ‘எல்லே’ என்று அழைக்கிறாள் என்னலுமாம்.

    இவள் இப்படிச் சொன்னவாறே, ‘இது ஓர் அன்பின் தன்மை இருந்தபடி என்?’ என்று நினைத்தவாறே தோழிக்கு ஒரு விகாரம் பிறந்தது; அதனைக் கண்டு ‘துடிகொள் இடை மடம் தோழி’ என்கிறாள். துடியோடு ஒத்திருக்கிற இடையையும், ஆத்ம குணத்தையுமுடைய தோழீ! அன்றிக்கே, 3உன் வடிவிற்கும் குணத்திற்கும் என் பக்க

____________________________________________________

1. ஈடுபடும்படியை விவரிக்கிறார் ‘அவன் கடியன் என்றால்’ என்று தொடங்கி.

2. மாயாவாத ருசியாவது, மாயாவாதிகளைப் போன்று விசேஷண அம்சத்தை
  ஆதரியாமல், விசேஷ்யரூப பிரஹ்ம ஸ்வரூப மாத்திரத்தை ஆதரித்தல்.

3. ‘உன் வடிவிற்கும்’ என்றது, பிரணய கதைகள் அறியும் உன் வடிவுக்கும்
  என்றபடி. என்றது, நீயும் உன் நாயகனோடு கூடி அதனாலே துவண்ட
  இடையை உடையையாய் அன்றோ இருக்கிறாய் என்றபடி. ‘குணத்திற்கும்’
  என்றது, பிறர் நோவு கண்டால் ஐயோ! என்று இரங்குதற்குத் தகுதியான
  குணத்துக்கும் என்றபடி. “தோழி” என்றதனை நோக்கி ‘என் பக்கலுண்டான
  அன்பிற்கும்’ என்கிறாள்.