|
New Page 1
லுண்டான அன்பிற்கும் ஈடாக
வார்த்தை சொல்லப்பாராய் என்கிறாள் என்னுதல். 1நான் அது அறியாமையாலும் வேண்டாமையாலும்
சொல்லுகிறேனோ, தாய்சொல்லுமதற்கு அஞ்சிக்காண் நான் இப்படிச் சொல்லுகிறது என்ன, அன்னை
என் செய்யுமே-உன் சொல் கேளாத நான், இனி, தாய் சொல்லோ கேட்கப் புகுகிறேன். 2அநசூயை,
பிராட்டியைப் பார்த்துப் ‘பெண்களுக்குத் தெய்வம் கணவனே காணும்’ என்ன, கேட்ட பிராட்டி நாணமுற்றுக்
கவிழ்தலை இட்டிருந்தாள்; ‘நான் இவர் பக்கல் ஈடுபாடுடையவளாய் இருக்கிற இருப்புக்குக் காரணம்,
பெருமாள் பக்கல் உண்டான குணங்களாலே என்றே அன்றோ நாட்டார் நினைத்திருப்பது; தெய்வ சம்பந்தத்தால்
அவருக்குக் குணமுண்டான தித்தனை போக்கி, குணங்கள் இல்லாதவருமாய் அழகு இல்லாதவருமானாலும் நான்
அவரை விடமாட்டாதே இருக்கும் இருப்பைக் காட்டலாமே அன்றோ அவரைக் குணங்களோடு பிரித்து வைக்கப்
பெற்றதாகில்’ என்றாளே அன்றோ. 3ஒரு விஷயத்தில் பாவபந்தம் உறைத்திருப்பார்
வார்த்தையாயிற்று இது. 4“வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது; என்னக் கடவ
_____________________________________________________
1. ‘நான் அது அறியாமையாலும்
வேண்டாமையாலும் சொல்லுகிறேனோ’
என்றது, என் வடிவும் குணமும் அறியாமலும், உன்பக்கல் அன்பு
இல்லாமையும்
சொல்லுகிறேனோ என்றபடி.
2. இங்கே, ‘அநசூயை’ என்று
தொடங்கி அருளிச்செய்யும் இது, “குணஹாநி
உண்டானாலும் அது விடுகைக்கு உறுப்பு அன்றிக்கே, பற்றுகைக்கு
உறுப்பு’
என்னுமதற்குக் காட்டப்படும் சம்வாதமாகும். ஆதலால், இதனை,
இத்திருப்பாசுரத்தின் அவதாரிகையில்
‘அதுவும் நான் அவனைப் பற்றுகைக்கு
உறுப்பாகச் சொன்னாய் ஆயினாயித்தனை’ என்ற வாக்கியத்தின்
பின்
கொண்டு கூட்டிப் பொருள் காணல் தரும். ‘நாட்டார் நினைத்திருப்பது’
என்றது, ‘நீ நினைத்திருப்பது’
என்றபடி. பிராட்டி இங்ஙனம்
அருளிச்செய்ததனால், பெருமாள் பக்கல் தமக்கு உண்டான பிராவண்யம்,
அவருடைய குணத்தால் வந்ததன்று; ஸ்வரூபத்தோடு கூடியது என்பது
தெளிவாம்.
3. பற்றக்கூடிய விஷயமானாலும்
குணஹாநி பற்றுகைக்கு உறுப்பாமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஒரு விஷயத்தில்’ என்று
தொடங்கி.
‘இது’ என்றது, மேலே கூறிய பிராட்டியின் திருவார்த்தையை.
4. குணஹாநி
பற்றுகைக்கு உறுப்பாம் என்பதற்கு வேறு பிரமாணம்
காட்டுகிறார் “வேம்பின் புழு” என்று தொடங்கி.
|