|
ஈ
ஈடு :-
ஆறாம் பாட்டு. 1மேல் ‘அன்னை, நீ செய்கிற
இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று, அவள் பொறாமல் செய்வது என்?
என்னுமளவிலே நின்றாள். இப்பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,
அவள் பிழைக்க மாட்டாள் என்ன, அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.
அன்னை என் செய்யில்
என்- அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள். 2“விரக அக்னியினால்
கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே, முடியாதே
இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்? நன்று;
- ‘தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய், இவள் நாயகனுடைய அழகு முதலானவைகளில் ஈடுபட்டவள்
ஆனாள்’ என்று ஊரார் பழி சொல்லுவார்களே என்ன, ஊர் என் சொல்லில் என்-அவர்கள் பழி
சொல்லில் என்? குணங்களைச் சொல்லில் என்? 3“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்”
என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது. தோழிமீர்-‘தாய் என் செய்யில் என்,
ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ்விஷயத்தில் ஈடுபாடு உடையவளாக
ஆக்குகை அன்றிக்கே, ‘தாய் பிழையாள், ஊரார்
___________________________________________________
1. மேலே, “அன்னை என்
செய்யும்” என்றதற்கும், இங்கு “அன்னை என்
செய்யில் என்? என்றதற்கும்” வேற்றுமை தோன்ற
அருளிச்செய்கிறார்
‘மேல்’ என்று தொடங்கி.
2. “குரவ : கிம்
கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”
என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 :
22. இச்சுலோகத்தில், “கிம் கரிஷ் யந்தி”
என்றதற்கு, பாவம், ‘முடியாதே’ என்று தொடங்கும்
வாக்கியம். “தக்தாநாம்”
என்று இறந்த காலமாகச் சொல்லுவதற்கு, பாவம், ‘கையற்றார்க்கு’
என்று
தொடங்கும் வாக்கியம். இந்தச் சுலோகம் இங்குப் பிரமாணமானபடி எப்படி?
எனின்,
“பெரியோர்கள் என்ன செய்வார்கள்?” என்ற போதே, ‘அவர்கள்
இறந்தாலும் அதனையும் நாம்
அநாதரித்திருப்போம்’ என்று
தோற்றுகையாலே, பிரமாணமாகத் தட்டு இல்லை என்க. “வாசுதேவன்
வலையுள் அகப்பட்டேன், அன்னை என் செய்யில் என்?” என்றதுவும்,
“விரஹாக்நிநா தக்தாநாம்
குரவ: கிம் கரிஷ்யந்தி” என்றதுவும் ஒரு
பொருளையே கூறுவனவாம்.
3. பழி
சொல்லுதற்கும் குணங்களைச் சொல்லுதற்கும் மேற்கோள், “கொல்லை”
என்று தொடங்குவது. இது,
திருவாய்மொழி, 6. 7 : 4. கொல்லை - வரம்பு
அழிந்த செயல்களைச் செய்பவள்.
|