|
பழ
பழி சொல்லுவர்கள்’ என்று
இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது 1ஆன பின்பு. என்னை - 2“தாய்
வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற ‘தாயார் பிழையாள், ஊரார் பழி
சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபாடுடையவளாய் இருக்கிற என்னை. இனி-உங்கள்
சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின். உமக்கு - ‘இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற
உங்களுக்கு. ஆசை இல்லை-இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.
தோழிமீர் -
3இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த்தோழி ஒருத்தியையும் பார்த்து
வார்த்தை சொல்லிப் போந்தாள்; இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே
‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லியாகிலும் மீட்க வேணும்’ 4என்று ஆயவெள்ளம்
எல்லாம் திரண்டன; அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள். அகப்பட்டேன்-“இப்போது ‘ஹிதம்’
என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமேயாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும் இவ்வருகே
எங்களிடத்தில் 5ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன, அது அப்படியே,
அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
_____________________________________________________
1. ‘ஆன பின்பு’ என்ற
இதனை, மேல் வருகின்ற ‘இனி என் பக்கல்
உங்களுக்கு நசை அற அமையும்’ என்றதனோடு கூட்டிப்
பொருள் காண்க.
2. பெரிய திருமொழி, 5,
5 : 4.
3. மேல், “தோழி” என்று
ஒருமையாக விளித்தவள் இங்கு, “தோழிமீர்”
என்று பன்மையிலே விளிப்பதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
‘இதற்கு
முன்பெல்லாம்’ என்று தொடங்கி.
4. “ஆயவெள்ளம் வழிபடக்
கண்டிது மாயமோ என்றலும்” என்பது
நம்பியகப்பொருள்.
5.
‘ஒருவாசி நினைத்திருக்க வேண்டாவோ’ என்றது, மீட்கையில் நசை
பண்ணவேண்டா என்னலாமோ? மற்றையோரைக்காட்டிலும்
விருப்பத்திற்குரிய எங்கள் வார்த்தைகளைக் கேட்க வேண்டாவோ?
என்றபடி.
|