|
மன
மன்னன் - 1“சிறியார்
பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான்
அகப்பட்டது. “ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும்
அநுபவிக்கலாம்படி தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக்காட்டிலும்
தாம் தாழநின்று கொடுக்கும் சீலத்தை. தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே
அன்றோ; அதற்காகத் தாழநின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது. “பும்சாம்” - 2அந்த
அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும்
படுத்த வல்லனவாம் என்றபடி. அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய்,
அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம். “திருஷ்டி சித்தாபஹாரிணம்”-3கண்களுக்கு
மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின்செல்லுமத்தனை நெஞ்சு. தாய் வேறு, கன்று வேறு ஆக்கும்
விஷயம்
_____________________________________________________
1. “வண் துவராபதி மன்னன்”
என்றதனை நோக்கிச் ‘சிறியார்’ என்றும்,
“முன்னை அமரர்” என்றதனை நோக்கிப் ‘பெரியார்’
என்றும்
அருளிச்செய்கிறார். இதனால், யோக்கியதையுடையாரோடு யோக்கியதை
இல்லாதாரோடு வேற்றுமை
அற ஈடுபடுத்தும் விஷயம் என்பதனைத்
தெரிவித்தபடி. இவ்வாறு ஈடுபடுத்துவதற்கு மேற்கோள், ‘ரூப
ஒளதார்ய
குணை: பும்சாம் திருஷ்டி சித்தாபிஹாரிணம்” என்பது, இது, ஸ்ரீராமா.
அயோத். 3 : 29.
2. மேற்காட்டிய இந்தச்
சுலோகத்தில் “பும்சாம்” என்று விசேடித்துக் கூறுவான்
என்? பெண்களை ஈடுபடுத்தாவோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்
‘அந்த அழகும்’ என்று தொடங்கி. வயிர உருக்கு-வயிரத்தைப் போன்ற
கடினமான மனத்தையும் உருக்குவது, வயிரம்-வஜ்ரம்.
3. எல்லா
இந்திரியங்களும் பிரதானமான மனத்தினைப் பின் செல்லுவன
ஆகையாலே “சித்த த்ருஷ்டி அபஹாரிணம்”
என்ன வேண்டாவோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கண்களுக்கு’ என்று தொடங்கி. அதற்குக்
காரணம் யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தாய் வேறு’
என்று தொடங்கி. கரணங்களுக்குப்
பிரதானமானதாகையாலே மனத்தினைத்
‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன
ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும் அருளிச்செய்கிறார். ஸ்ரீ
பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின
விஷயம் அன்றோ இது
என்பது, தொனிப் பொருள்,
|