பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
128

அன

அன்றோ என்றபடி. 1“எந்தப் பரமபதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும், பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப்பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள் ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது. நித்தியசூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே 2‘முதல்வன்’ என்கிறது. அன்றிக்கே, அப்பொழுதைக்கு அப்பொழுது ஆசைப்படக்கூடிய விஷயமானவன் என்னுதல். ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி. ‘வண் துவராபதி மன்னன்’ என்றதனால், 3முதன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக்கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’ 4“பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னுகோயில்” என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக்கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது என்பதனைத் தெரிவிக்கிறாள். அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் 5மேன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.

_____________________________________________________

1. யஜீர்.

2. “முதல்வன்” என்பதற்கு இரு பொருள். ஒன்று, நித்தியசூரிகளுக்கு
   முன்பில்லாத இனியனாயிருந்து அவர்கள் சத்தையை நிர்வகிக்குமவன்
   என்பது. “முதல்வன்” என்றது, ஆதி என்ற பொருளதாய் ‘ஆதீயத இதி
   ஆதி:’
என்கிற வியுத்பத்தியால், அப்பொழுதைக்கு அப்பொழுது
   ஆசைப்படக்கூடிய விஷயமானவன் என்பது இரண்டாவது பொருள்.

3. முன்னை அமரர் முதல்வனாயிருந்து வைத்தும், வண் துவராபதியிலே
  மன்னனாயிருக்கிறான் என்று பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி அதனை
  அருளிச்செய்கிறார் ‘முதன்மை தோற்ற’ என்று தொடங்கி.

4. பெண்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கையால் வந்த
  வேறுபாட்டினையுடையவன் என்பதற்குப் பிரமாணம், ‘பதினாறாமாயிரவர்’
  என்பது. இது, பெரியாழ்வார் திருமொழி. 4. 9 : 4.

5. வண் துவராபதியிலே இருக்கச்செய்தே மன்னனாயிருக்கிறான் என்று
  வெறுப்பிலே வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘மேன்மை தோற்ற’
  என்று தொடங்கி.