பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
129

மண


    மணி வண்ணன்-1அவ்விரண்டும் இல்லையேயாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு. காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ. வாசுதேவன்-வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு. 2“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே, எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

    3
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-அவனுடைய 4அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு, ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றாற் போலே, அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று

_____________________________________________________

1. ‘அவ்விரண்டும்’ என்றது, “முன்னை அமரர் முதல்வன், வண் துவராபதி
  மன்னன்” என்பனவற்றால் கூறிய மேன்மையையும் நீர்மையையும்.
  அவற்றிலும் வடிவழகு கவர்ச்சியை உண்டாக்குமோ? என்ன, ‘காதலி’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. குடிப் பிறப்பு விட ஒண்ணாமைக்கு மேற்கோள் அருளிச்செய்கிறார் “நான்
  தசரத சக்கரவர்த்தியினுடைய” என்று தொடங்கி.

  “ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந:
  ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”

 
என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
  மற்றைய சம்பந்தங்களை இட்டுக் கூறாமல், சக்கரவர்த்தியின்
  சம்பந்தத்தைக்கொண்டு கூறுவதற்கு, பாவம் ‘பிராட்டி’ என்று தொடங்கும்
  வாக்கியம்.

3. “முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்” என்பதற்கு, வேறும்
  ஒரு கருத்து அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி மீண்டும் எடுக்கிறார்
  “முன்னை” என்று. ஈடுபடுத்துவதற்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அவனுடைய’ என்று தொடங்கி.

4. “கடியன் கொடியன்” என்ற திருப்பாசுரத்தையும், “தோழி நம் கண்ணன்
  கடியனே” என்ற திருப்பாசுரப் பகுதியையும் நோக்கி, ‘அருள் அற்ற
  தன்மையோடு நீர்மையோடு’ என்றும், “ஊர் என் சொல்லில் என்?”
  என்றதனை நோக்கி ‘ஊராருடைய’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.