|
த
தானேல் எம்பெருமான் -
தானாகில், முற்றறிவினனாய் எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனாய் இருப்பான் ஒருவன்.
என்றது, அகவாய் அறியாதான் ஒருவன் அல்லன், அறிந்தால் உபேக்ஷிக்கமாட்டாதான் ஒருவன் அல்லன்
என்பதனைத் தெரிவித்தபடி. அவன்-அப்படி, சர்வஜ்ஞனாய் சர்வசக்தியானவன். என்னாகி ஒழிந்தான்-1நான்
இட்டவழக்கு ஆனான். என்னையுடையவன் நான் இட்ட வழக்கு ஆனான், உடையவன்தான் உடைமை யானான்:
கீழ் மேல் ஆயிற்று என்றபடி. நன்று; அவன் விபூதி செய்தது என்? என்னில், வானே மாநிலமே மற்றும்
முற்றும் என் உள்ளனவே-2 “மனைவி, புத்திரன், வேலைக்காரன் இவர்கள் ஸ்வதந்திரம்
இல்லாதவர்கள், பரதந்திரர்கள்; இவர்கள் எவனுக்கு அடிமை ஆவர்களோ அவனுக்கே இவர்கள் செல்வமும்
உரியது” என்கிறபடியே, விபூதியையும் நான் இட்ட வழக்கு ஆக்கினான் என்னுதல். 3அன்றிக்கே,
விபூதியை யுடையவனாய்க் கொண்டு என்னுள்ளே புகுந்தான் என்னுதல்.
‘வானே மாநிலமே’
என்றது, ஐம்பெரும் பூதங்கட்கும் உபலக்ஷணம். ‘மற்றும்’ என்றது, ஐம்பெரும் பூதங்களின் காரியங்களான
அண்டங்களை. ‘முற்றும்’ என்றது, பரமபதத்தை. ‘என்னுள்ளனவே’ என்றது, விபூதியும் என்னுள்ளே புகுந்தது
என்றபடி. 4அன்றிக்கே, உபயவிபூதி
_____________________________________________________
1. “என்னாகி ஒழிந்தான்”
என்பதற்கு நான்கு வகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார். ‘நான் இட்ட வழக்கு ஆனான்’ என்றது முதல்,
‘விபூதியையும் நான் இட்ட வழக்கு ஆக்கினான்’ என்பது முடிய முதற்
பொருள். “எம்பெருமான்” என்றதனைக்
கடாக்ஷித்து, பாவம்
அருளிச்செய்கிறார் ‘என்னை யுடையவன்’ என்று தொடங்கி. கருத்து
அருளிச் செய்கிறார்
‘உடையவன் தான்’ என்று தொடங்கி.
2. “த்ரய ஏவாsதநா
லோகே பார்யா தாஸஸ் ததா ஸீத:
யத்தே ஸமதிகச்சந்தி
யஸ்யை தே தஸ்ய தத் தநம்.”
என்பது, பாரதம் உத்யோகபர்வம்.
ஆக முதற்பொருளுக்குக்
கருத்து, உலகத்தோடு கூடினவனாய்க் கொண்டு
எனக்குப், பரதந்திரனானான் என்பது.
3. இரண்டாவது
பொருளுக்குக் கருத்து, அவனும் என்னுள்ளே புகுந்தான்,
விபூதியும் என்னுள்ளே புகுந்தது என்பது.
4. மூன்றாவது
பொருளுக்குக் கருத்து, உபய விபூதி நிர்வாகத்தையும் என்
பக்கலிலே இருந்துகொண்டு செய்கிறான்
என்பது.
|