பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
137

அவனுக

அவனுக்கு ஆக்குதல் என்பதே அன்றோ இங்கே சொல்லப்பட்டது; அவ்வளவு அன்றிக்கே, 1இவள் தலைமை இருந்தபடி; அவன். தன்னைத் தப்புவித்த உபகாரத்துக்கு அநந்யார்ஹமாக இவள் தன்னை அவன் தனக்கு எழுதிக் கொடுக்கிறாள். 2அங்கு ஒவ்வோர் உபகாரத்துக்கே அன்றோ அப்பெண்கள் தங்களை அவ்வவர்க்கு உரிமையாக்குவது, இங்கு எல்லா உபகாரங்களையும் செய்தால் அவனுக்கு ஆக்காது ஒழிய ஒண்ணாதே அன்றோ.

    தோழீ! நாம் உறுகின்றது எந்நாள் கொல்லா-தோழீ! அவன், தன்னை உளனாக்கி வைத்தான், இனி நாம் அவனைக் கிட்டுவது என்றோ? 3“ஸ்ரீராமபிரான் இந்தத் துக்கத்தினுடைய கரையை எப்பொழுது அடையப் போகிறார்?” என்றாற்போலே காணும் தோழிதான் இருப்பது; ஆதலின், ‘நாம் உறுகின்றது’ என்கிறாள். 4‘இப்போது அவனை அடைந்து, நம் பிரயோஜனம் பெற ஆசைப்படுகிறோம் அல்லோம்; பின்னை எற்றிற்கு? என்னின், அன்னையர் நாணவே-‘பிரிந்த பின்பு அவன் தானே வருமளவும் ஆறி இருந்திலள், அவன் தான் வரவு தாழ்த்தான்’ என்று இருவர்க்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே, ‘நாம் இத்தலை மடல் எடுக்குமளவாம்படி பிற்பாடரானோமே!’ என்று, 5“எனக்கு இது மிகவும் நாணத்தைத் தருகின்றது,

__________________________________________________

1. இவள் - ஆழ்வாராகிய நாயகி. அநந்யார்ஹமாக - எம்பெருமானாகிய
  தலைவனுக்கே உரிமைப்பட்டவளாக.

2. வேறொரு தன்மையாலும் வேறுபாட்டினைக் காட்டுகிறார் ‘அங்கு’ என்று
  தொடங்கி.

3. “நாம்” என்று தோழியையும் கூட்டிச் சொன்னதற்கு, பாவம் அருளிச்
  செய்கிறார் ‘ஸ்ரீராமபிரான்’ என்று தொடங்கி. இது திருவடியைப் பார்த்துப்
  பிராட்டி கூறியது.

  “சோகஸ்ய அஸ்ய கதா பாரம் ராகவ: அதிகமிஷ்யதி
   பிலவமாந: பரிச்ராந்த: ஹதநௌ: சாகரே யதா”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 37 : 5. இதனால், சமமான துக்கத்தையுடையவளாதலின்
  தோழியையுங்கூட்டிச் சொல்லுகிறாள் என்றபடி. “நாம்” உளப்பாட்டுத்
  தன்மைப் பன்மை.

4. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார் ’இப்போது’ என்று தொடங்கி.

5. “பிரசீதந்து பவந்தோ மே ஹ்ரீ : ஏஷா ஹி மம அதுலா”


  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 9. தன்னை அடைந்த முனிவர்களைப் பார்த்து
  ஸ்ரீராமபிரான் கூறியது.