|
என
என்றது, 1வெண்முறுவலையும்
சிவந்த அதரத்தையுமுடைய உபகாரகனை என்றபடி. அன்றிக்கே, தூய்தான பற்களின் வரிசைகளையும், தொண்டைக்
கனி போன்ற அதரத்தையுமுடையவனை என்னுதல். இப்போது அவனை அழிக்க நினைத்து மடல் எடுக்கிறாளாகில்,
அவன் உபகாரத்தைச் சொல்லுவான் என்? என்னில், இவையேயன்றோ இவள் தான் அவனை அழிக்க நினைத்தபடி.
என்றது, அச்சம் உறுத்தி முகங்காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிற இத்தனை போக்கி, அவனை அழிக்க
உத்தேசியமாகச் செய்கிறாள் அல்லள் என்றபடி. அவ்வுபகாரங்கள் எல்லாம் 2தனக்காகச்
செய்தது என்று இருக்கிறாள் ஆதலின் ‘பிரான்’ என்கிறாள்.
3பூத்
தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்பன சில சங்கேதங்கள் உண்டு தமிழர்க்கு.
பூத் தரு புணர்ச்சியாவது, இவள் ‘உத்தியான வனத்திலே பூக் கொய்ய’ என்று புறப்பட்டுப் பூக்
கொய்யாநிற்க, அருங்கொம்பிலே எட்டாதே நின்ற பூவை இவள் ஆசைப்பட்டால் ஒருவன் தன்னைப் பேணாதே
மரத்தின்மீது ஏறி அம்மலரைப் பறித்துக் கொடுக்க, ‘இவன் தன்னைப் பேணாதே தன் நினைவைத்
தலைக்கட்டினான்’ என்று அதற்காகத் தன்னைக் கொடுத்தல். புனல் தரு புணர்ச்சியாவது, புதுப்புனல்
ஆடப் போய் நீரிலே இழிந்து விளையாடா நிற்க, ஒரு சுழி வந்து இவளைக் கொடுபோக, அதில் நின்றும்
எடுத்து ஏறவிட்டதற்காகத் தன்னைக் கொடுத்தல். களிறு தரு புணர்ச்சியாவது, வீதியிலே நின்று
விளையாடாநிற்க, யானையின் கையிலே அகப்படப் புக, அதன் கையில் நின்றும் தன்னை மீட்டமைக்குத்
தன்னைக் கொடுத்தல் என்று ஒரு மரியாதை கட்டினார்கள்; 4இவளை நோக்கினதற்காக,
இவள், தன்னை
_________________________________________________
1. “முறுவல்” என்பதற்கு,
இருபொருள்: முதலது, புன்முறுவல்; இரண்டாவது,
பற்கள்.
2. ‘தனக்காகச் செய்தது’
என்றது, எனக்குத் தன்னிடத்திலே பிராவண்யம்
மிகுவதற்காகச் செய்தது என்றபடி.
3. எம்பெருமான், தன்னைக்
காப்பாற்றிக்கொண்டதனையே, இவள், தனக்கு
உபகாரமாகச் சொல்லுகையாலே வேறுபாடு காட்டுகிறார்
‘பூத்தரு புணர்ச்சி’
என்று தொடங்கி.
4. ‘இவளை’ என்றது, தலைவியை. நோக்குதல்-காப்பாற்றுதல்.
அவனுக்கு-தலைவனுக்கு.
|