பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
139

வருமதனையும் கொண்டான். என்றது, 1வாசல்விட்டுப் புறப்படச் செய்யக் கூடியதல்லாத நாணத்தையும் கைக்கொண்டு, அகவாயில் ஓட்டம் தாய்மார்க்கும் சொல்லக் கூடியதன்றிக்கே இருக்கும் அடக்கத்தையும் கைக்கொண்டான் என்றபடி. என்னை-அவ்விரண்டனையுமே நிரூபகமாகவுடைய என்னை. நல் நெஞ்சம் கூவிக்கொண்டு-பறித்துக்கொண்ட நாணையும் நிறையையும் தந்தாலும் இட்டு வைப்பதற்குக் கலம் இல்லாதபடி, அவற்றுக்குப் பற்றுக்கோடான, என்னிற்காட்டிலும் தன் பக்கல் அன்பிலே ஊற்றமுடைய மனத்தைத் தன் பக்கலிலே நொடித்துக்கொண்டு 2‘இவற்றைக் கொண்டு இன்னம் கடலிலே கிடக்கில்’ இவள் மனோவேகம் இருந்தபடியால் திரைமேலே நடந்து வந்து கையும் மடலுமாக நிற்கவும் கூடும்’ என்று பார்த்து எட்டா நிலத்திலே சென்று இருந்தானாயிற்று என்கிறாள் மேல் : சேண் உயர் வானத்து இருக்கும்-மிக்க ஒக்கத்தையுடைத்தான வானத்திலே இருக்கும். என்றது, 3அந்தர ஜாதிகளான இந்திரன் முதலாயினோர்கள் குடி இருப்பில் அன்றிக்கே பரமபதத்தில் இருப்பதனைக் குறித்தபடி. சேண் என்றாலும் உயர்வு, உயர் என்றாலும் உயர்வு; ஆக, இரண்டாலும் மிக்க உயர்வினைக் குறித்தபடி. தேவபிரான் தன்னை-4இங்கே வந்து கொண்டு போன நாணும் நிறையுமான ஒடுக்குமாட்டைப் பாரித்துக் கொண்டு தன் வெற்றியைக் காட்டிக்கொண்டிருக்கிறபடி. 5அன்றிக்கே, பிரமன் முதலாயினோர் ஓலக்கம் போலப்

_________________________________________________

1. மேலே கூறிய இரண்டினையும் முறையே விவரிக்கிறார் ‘வாசல் விட்டு’
  என்று தொடங்கி.

2. மேற்பாசுரத்தில் “அலைகடற்பள்ளி அம்மான்” என்றவள், இப்பாசுரத்தில்
  “சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான்” என்று கூறுவதற்குக் கருத்து
  அருளிச் செய்கிறார் ‘இவற்றைக்கொண்டு’ என்று தொடங்கி.

3. ‘அந்தர ஜாதி’ என்றது, சிலேடை: ஆகாசத்திலே சஞ்சரிக்கின்ற சாதி
  என்றும், தாழ்ந்த சாதி என்றும் பொருள்.

4. “தேவபிரான் என்பதற்கு, நித்தியசூரிகள் பக்கலிலே வெறுப்புத் தோன்ற
  பாவம் அருளிச்செய்கிறார் ‘இங்கே வந்து’ என்று தொடங்கி. ஒடுக்கு
  மாட்டை-முட்டுக்கோல் கொண்டு அபகரித்த செல்வத்தை. “தன்னை”
  என்பதற்கு, பாவம் ‘தன் வெற்றியை’ என்று தொடங்கும் வாக்கியம்.

5. “தேவபிரான்” என்பதற்கு, நித்தியசூரிகள் பக்கல் ஆதரம் தோற்ற, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.