|
New Page 2
பேறு இழவு முதலியவைகளில்
வருகின்ற துடிப்பு அறியாத ஓலக்கம் அன்றிக்கே, ‘சம்சார மண்டலத்திற்போய் நான் பெற்றுக்கொண்டு
வந்தவை இவை’ என்று தன் வெற்றியைக் காட்டிக்கொண்டிருக்கிற ஓலக்கம் முதன் முன்னம் 1அதுவாகப்
பெற்றோமே என்பாள் ‘தேவபிரானை’ என்கிறாள் என்னலுமாம். 2பிரிவினால்
வரும் வியசனம் அறியார்களேயாகிலும் சேர்க்கையால் வரும் ரசம் அறிவார்களே அன்றோ முன்னம்.
சேண் உயர் வானத்து
இருக்கும் தேவபிரான் தன்னை-3அவன் தானும் ‘பிரளயத்துக்கு அழியாத நிலம்’
என்னுமித்தனையாயிற்று அவ்விடத்துக்கு ஏற்றமாக நினைத்திருப்பது; ‘விரஹப் பிரளயம் ஏறிப்
பாயாத இடம் இல்லை’ என்று அறிய மாட்டுகின்றிலன்; அறிந்தானாகில் கிடந்த இடத்தே கிடக்குமே!
4அன்றிக்கே, நீயே பார்ப்பாயாக அவ்வோலக்கமும் அவனும் அவ்விருப்பும் என்கையிலே
படப் புகுகிற பாடு; இருந்த இடத்தே இருக்க ஒட்டுவேன் என்று இருக்கிறாயோ? என்பாள்
‘தேவபிரான் தன்னை’ என்கிறாள் என்னலுமாம். இப்போது இங்ஙனே ஒருவாய்ப்பகட்டுச்
சொல்லுகிறாய், அது செய்து தலைக்கட்ட வல்லையாகப் புகுகிறாயோ? என்ன, ஆணை என்கிறாள். இவள்
இப்போது அவன்மேல் ஆணை இடுகிறாளோ, தோழிமேல் ஆணை இடுகிறாளோ? என்னில், அழிக்க நினைக்கப்பட்டவன்மேல்
ஆணை இடாளே,
__________________________________________________
பேற்றினால் வரும் துடிப்பாவது,
ஈடுபாடு. துடிப்பு-ஈடுபாடும், கிலேசமும்.
1. அதுவாக-அந்த நித்தியசூரிகள்
ஓலக்கமாக.
2. பேற்றினால் வரும்
துடிப்பு ஒழிய, இழவினால் வரும் துடிப்பு அறிவர்களோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘பிரிவினால்’ என்று தொடங்கி.
என்றது, சேர்க்கையால் வரும் ரசம் அறிந்தபோதே “இம்மகளைப்
பெற்ற
தாயர்” என்ற பாசுரத்தில் கூறியவாறே பிரிவால் வரும் துக்கமும் பொறுக்க
மாட்டார்கள்
என்றபடி.
3. “சேணுயர் வானத்திருக்கும்”
என்பதற்கு, வேறும் ஒரு கருத்து
அருளிச்செய்கிறார் ‘அவன் தானும்’ என்று தொடங்கி. அவன் அறியான்
என்பதனை நீ எப்படி அறிந்தாய்? என்ன, ‘அறிந்தானாகில்’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
4. “தேவபிரான் தன்னை”
என்பதற்கு, நித்தியசூரிகள் பக்கலில் வெறுப்புத்
தோன்ற வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று
தொடங்கி.
|