|
ப
தாகும்” என்று இருக்கக்கூடிய
நாம், மடல் ஊர்ந்தேயாகிலும் என்றபடி. 1பெற்று அன்றித் தரியாத உபேய வைலக்ஷண்யம்,
அதற்கு அடியான உபாய வைலக்ஷண்ய அநுசந்தானம், ‘அவ் வுபாயந் தன்னாலே பேறு’ என்கிற துணிவு, வேறு
ஒன்றினை உபாயமாக நினையாமை, முறையிலே பெறுகிறோம் என்று நினையாமை ஆகிய இவைகளே, இங்கு ‘மடல்’
என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. 2“மடல் ஊர்தும்” என்றாள் மேல்; ‘இது
உனக்கு வார்த்தை அன்று, 3முதல் தன்னிலே பெண்கள் மடல் ஊர்தல் ஆகாது என்று விலக்கியுள்ளார்கள்.
அதற்கு மேல், நீயோ எனின், 4“எப்பொழுதும் உயிரை ஒத்த நாயகன் நன்மையிலேயே நோக்கங்கொண்டவள்”
என்கிறபடியே. உன்னை அழிய மாறியும் அவனுக்கு நன்மையையே விரும்புகின்றவளாய் இருப்பவள் ஒருத்தி,
அவனோ எனின், உன்பக்கல் வருகைக்கு உன்னைக் காட்டிலும்
_________________________________________________
1. ஈண்டு ‘மடல்’ என்றது,
முறையிலே பெறுகிறோம் என்று நினையாமையாகிற
விரைவினை. ஆகிலும் அதற்குக் காரணங்கள் ஆகையாலே,
உபேய
வைலக்ஷண்யம் முதலான மற்றை நான்கினையும் சேர்த்து அருளிச்செய்கிறார்
‘பெற்று அன்றித்
தரியாத’ என்று தொடங்கி. உபேய
வைலக்ஷண்யம்-சர்வேச்வரனுடைய அழகு முதலிய காரணங்களால்
வருகின்ற வைலக்ஷண்யம். ‘அதற்கு அடியான என்றது, பெற்று அன்றித்
தரியாமைக்கு அடியான என்றபடி. உபாய
வைலக்ஷண்யம்-சர்வேச்வரனுடைய
முற்றறிவுடைமை, வரம்பில் ஆற்றலுடைமை முதலியவைகள் காரணமாக
வருகின்ற வைலக்ஷண்யம். துணிவு-வேறு ரக்ஷகர் இல்லாமையாலே
‘ஈச்வரனாலே பேறு’ என்கிற மன உறுதி.
‘வேறு ஒன்றனை’ என்றது,
சித்தோபாயத்திற்கு வேறுபட்டவையான இதர உபாயங்களை.
2. “மடல் ஊர்ந்தும்” என்கையாலே,
மடல் ஊர்தல் தகாது என்று
தோன்றுகையாலே, அங்ஙனம் தோன்றும் பொருளை விவரிக்கிறார் “மடல்
ஊர்தும் என்றாள்” என்று தொடங்கி.
3. இங்கே,
“எத்திணை மருங்கினும்
மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை
யான”
என்ற தொல்காப்பியச் சூத்திரத்தையும்,
“கடலன்ன காமம் உழந்தும்
மடல்ஏறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்”
என்ற திருக்குறளையும் நினைவு கூர்தல்
தகும்.
4. “ராமஸ்ய தயிதா
பார்யா நித்யம் பிராணஸமாஹிதா”
என்பது, சங்க்ஷேபராமாயணம்
பாலகாண்டம்.
|