பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
146

விரைகின்றவனாவான் ஒருவன், முறையிலே பெறுகிறோம் என்று நினையாமையால் படுகிறாயித்தனை, நீ சாகஸத்திலே ஒருப்படுகிற இது 1‘உன் ஸ்வரூபத்தோடு சேராது’ என்ன, அது பார்க்க ஒண்ணாதபடி காண் எனக்கு அவன்பக்கல் உண்டான அன்பின் மிகுதி என்கிறாள். யாம் மடல் ஊர்ந்தும்-2இப்படி இருக்கிற என் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் பெறத் தவிரேன். 3செய்யக்கடவது அல்லாததனைச் செய்தாகிலும் பெறக் கடவேன். 4ஆத்மாவோடு சேராத செயலைச் செய்தேயாகிலும் பெறக்கடவேன். 5பிரணவத்தில் சொல்லப்பட்ட சேஷத்வத்திற்கு உரியதான ஆத்மாவுக்கு வாசகசப்தம் இருக்கிறபடியாயிற்று ‘யாம்’ என்பது. 6அத்தலையைக்கொண்டே அன்றோ இவனை நிரூபிப்பது.

    எம் ஆழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர்கொண்டு சூடுவோம்-‘எம் பிரான்’ என்றதனால்

__________________________________________________

1. ‘உன் ஸ்வரூபத்தோடு சேராது’ என்றது, அவனுக்கு அதிசயத்தையே
  விளைக்க வேண்டும்படியான உன் சொரூபத்தோடு சேராது என்றபடி.

2. “மலர்கொண்டு சூடுவோம்” என்றதனையும் கூட்டி, “நாம்” என்றதிலே
  நோக்கமாக, பாவம் அருளிச்செய்கிறார் ‘இப்படி இருக்கிற’ என்று தொடங்கி.

3. “மலர்கொண்டு சூடுவோம்” என்றதனையும் கூட்டி “மடல் ஊர்ந்தும்”
  என்றதிலே நோக்காகக் கருத்து அருளிச்செய்கிறார் ‘செய்யக்
  கடவதல்லாததனை’ என்று தொடங்கி.

4. “யாம் மடலூர்ந்தும்” என்றதற்குச் சுவாபதேசத்திலே கருத்து
  அருளிச்செய்கிறார் ‘ஆத்மாவோடு’ என்று தொடங்கி. என்றது,
  பிரணவத்திலே சொல்லப்பட்டதான சேஷத்வ ஸ்வரூபத்திற்குச் சேராததான
  தம் முயற்சியைச் செய்தேயாகிலும் என்றபடி.

5. பிரணவத்தில் போலே இங்கு ஆத்மாவைக் காட்டுகிற சொல் யாது?  என்ன,
  ‘பிரணவத்தில்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

6. “ஓங்காரோ விஷ்ணு வாசக:” என்கிறபடியே, பிரணவம் சர்வேச்வரனைக்
  காட்டும் சொல்லன்றோ? என்ன, ‘அத்தலையை’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். என்றது, ‘இராஜ சேவகன்’ என்கிற இடத்தில்,
  அரசனைக் கொண்டு சேவகனை நிரூபித்தாற்போலே, ஈச்வரனை இட்டு
  இவனை நிரூபிக்கிறது ஆகையாலே, சப்தப் பிராதாந்யத்தைக் கொண்டு
  ஆத்மாவைச் சொல்லுகிறது என்னலாம் என்றபடி.