பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
147

நாராயண சப்தார்த்தம் சொல்லப்படுகிறது. 1இவனைக் கொண்டு அன்றோ அவனை நிரூபிப்பது. 2அவன் கையும் திருவாழியுமாகப் புறப்பட்டாற்போலே அன்றோ நான், கையும் மடலுமாகப் புறப்பட்டால் இருப்பது என்பாள் ‘ஆழி அம்கைப் பிரான்’ என்கிறாள். 3நான் கையும் மடலுமாகப் புறப்பட்டால், அஞ்சி எதிரே வந்து தன்கையில் ஆபரணத்தை வாங்கி என்கையிலே இட்டு, தன் தோளில் மாலையை வாங்கி என்தோளிலே இட்டானாகில் குடி இருக்கிறான்; இல்லையாகில் எல்லாங்கூட இல்லையாகின்றன. என் தோளில் மாலையைப் பாராய், நான் செவ்வி மாலை சூடவேணுங்காண் என்பாள் ‘பிரானுடைத் தூ மடல்’ என்கிறாள். 4விரஹத்தாலே தன் மார்பின் மாலை சருகாய் அன்றோ கிடக்கிறது, செவ்விமாலை உள்ளது அவன் பக்கலிலே அன்றோ. நன்று; ஒன்றைச் சொல்லுகிறாயாகில் செய்து தலைக்கட்டப் புகுகிறாயோ, உன் பெண் தன்மை உன்னைக் காற்கட்டுங்காண் என்ன, யா மடம் இன்றி-5அதுவோ! பெண்தன்மை இல்லாதார் செய்யுமதனை முதலிலே செய்யக் கடவோம். தெருவுதோறு-“உலகு

_________________________________________________

1. “எம்-பிரான்” என்றதனால், நாராயண சப்தார்த்தம் சொல்லப்படுதல்
  யாங்ஙனம்? எனின், ‘இவனைக்கொண்டு’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். என்றது, என் சொல்லியவாறோ? எனின், நாரங்களுக்கு
  அயநம் என்று ஆத்மாவைக் கொண்டு சர்வேச்வரனை நிரூபித்தாற்போலே,
  இங்கும், “எம்” என்று இத்தலையைக் கொண்டு அவன் நிரூபிக்கப்படுகிறான்
  என்றபடி. “எம்” என்றது, “நார” சப்தார்த்தம்.

2. “யாம் மடல் ஊர்ந்தும்” என்றதனையும் கடாக்ஷித்து, “ஆழியம் கைப்பிரான்”
  என்பதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘அவன் கையும்’ என்று தொடங்கி.
  என்றது, அவன் கையும் திருவாழியுமாகப் புறப்பட்டால் காரியம்
  அமோகமாமாறு போன்று, நான் கையும் மடலுமாகப் புறப்பட்டால் காரியம்
  அமோகமாம் என்றபடி.

3. “தூமடல் தண்ணம் துழாய் சூடுதும்” என்றதனைக் கடாக்ஷித்து, “ஆழி அம்
  கை” என்பதற்கு வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘நான் கையும்
  மடலுமாக’ என்று தொடங்கி. என்றது, தனக்கு இடுவதற்காகத் திருவாழியைத்
  தரித்திருக்கிறான் என்று சொல்லுகிறாள் என்றபடி. எல்லாம் கூட-உபாய
  ஸ்வரூபமும்கூட.

4. ‘தனக்குச் செவ்விமாலை இல்லையோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘விரஹத்தாலே’ என்று தொடங்கி.

5. ‘அதுவோ’ என்றது, பெண்தன்மையோ காற்காட்டுவது என்றபடி.
  பெண்தன்மை இல்லாதார்-ஸ்வதந்திரராக இருப்பவர்.