|
New Page 2
தோறு அலர்தூற்றி” என்றாளே
மேல்; அங்ஙனம் உலகமாகத் திரண்டிருக்க உலகத்திற்காக ஒரு வார்த்தை சொல்லி விடுவேனோ,
தெருவுகள்தோறும் புக்கு, அறியாதார் எல்லாரும் அறியும்படி அலர் தூற்றக் கடவேன். 1‘கிருஹ
அர்ச்சனைகள் அர்ச்சக பராதீனம்’ என்று ஒரு மூலையிலே புக்கு இருக்க ஒட்டுவேனோ. அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி-வேற்றுப் பெண்கள் 2நாக்குப் புரளாத படியான பழிகளை எல்லாம்
சொல்ல. சிசுபாலன் முதலானார் வாயில் கேளாதவற்றை எல்லாம் என் வாயிலே கேட்க அன்றோ
புகுகிறான். அன்றிக்கே, அவர்கள் நா, மீளாமல் உருவப் பழி சொன்னபடியே இருக்கும்படியான பழிகளைத்
தூற்ற என்றுமாம். அன்றிக்கே, நாம் 3தங்களுக்கு அடங்காமல் மடல்கொண்டு புறப்பட்ட
பழியைத் தூற்ற என்னலுமாம்.
நாடும் இரைக்கவே
- அவன் என்னுடைய ஊரவர் கவ்வை நீக்கிலனாகில், நான், 4தன்னை நாடாக இரைக்கும்படி
பண்ணுகிறேன். என்றது, உலகமெல்லாம் கலங்கும்படி செய்கிறேன். ‘ஒருத்தி ஒருவனைப் படுத்திற்றே!
ஒருவன் முகங்காட்டிற்றிலன்’ என்னும்படி செய்கிறேன் என்றபடி. 5அவனைப் பற்றி அறிவிக்கும்
வாக்கியங்களும் அவனை அடையும் சாதனங்களைப் பற்றி அறிவிக்கும் வாக்கி
_______________________________________________
1. “தெருவுதோறு அலர் தூற்றி”
என்றதற்குச் சுவாபதேசப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘கிருஹ அர்ச்சனைகள்’ என்று தொடங்கி.
என்றது,
அர்ச்சாவதாரத்தில் ஈடுபாட்டினைப் போக்கி நாஸ்திகராம்படி செய்யக்
கடவேன் என்றபடி.
2. நாக்குப் புரளாதபடியான
- சொல்லுதற்குக் கூசும்படியான. “அயல்
தையலார்” என்றதற்குச் சுவாபதேசம், ‘சிசுபாலன் முதலானார்’
என்று
தொடங்கும் வாக்கியம்.
3. தங்களுக்கு - வேற்றுப்
பெண்களான அவர்களுக்கு.
4. ‘தன்னை நாடாக இரைக்கும்படி
பண்ணுகிறேன்’ என்றது, நானும் பழியைத்
தூற்றி, நாடும் இரைக்கும்படி செய்கிறேன் என்றபடி.
5. “நாடும் இரைக்க” என்றதற்கு,
சுவாபதேசம் அருளிச்செய்கிறார் ‘அவனைப்
பற்றி’ என்று தொடங்கி. ‘அவனைப் பற்றி அறிவிக்கும்
வாக்கியங்கள்’
என்றது, “நாராயண பரம்பிரஹ்ம” என்பது போன்ற வாக்கியங்களை.
‘அவனை அடையும்
சாதனங்களைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்கள்’
என்றது, “நிதித்யாஸிதவ்ய:” என்பது போன்ற
வாக்கியங்களை. வாச்யனாக
உள்ள சர்வேச்வரன் இல்லாமையாலே அழிய அன்றோ புகுகின்றன என்றபடி.
|