|
ம
மான வடிவையுடையவன்.
1மடல் ஊர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவைச் சொன்னபடி. வண்ணன் -
வடிவையுடையவன். கண்ணபிரான்தன்னை - அவ்வடிவை, அவதரித்து எனக்கு உபகரித்த கிருஷ்ணனை. வடிவழகு
இது. ஸ்வாபாம் இது. இங்ஙனம் இருக்க, நான் மடல் ஊராது ஒழிவது எங்ஙனயோ? விரைக் கொள்
பொழில் குருகூர் - 2இவர் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே ‘அவன் வரவு அணித்து’
என்று ஊரானது உண்டான பரிமளத்தால் நிறைவு பெற்றபடி. நிரைக் கொள் அந்தாதி - இவர் முன்னடி தோற்றாதே
மடல் ஊரச் செய்தேயும், பிரபந்தமானது, எழுத்தும் அசையும் சொல்லும் பொருளும் அடியும் தொடையும்
பாவும் இசையும் தாளமும் அந்தாதியும் சேர விழுந்தபடி. 3இவர் முன்னடி தோற்றாதபடி
கலங்கிச் சொல்லச் செய்தேயும் பகவானுடைய திருவருள் காரணமாகப் பிறந்த பிரபந்தம் ஆகையாலே,
இலக்கணங்கள் ஒருசேர விழத் தட்டு இல்லையே அன்றோ. 4“சுலோகத்திற்குரிய எல்லா
இலக்கணங்களும் அமைந்த ஸ்ரீராமாயணமானது சோகத்திற்குப் பின்பு சொல்லப்பட்ட காரணத்தால் சோக
வேகத்தால் சொல்லியதாம்” என்கிறபடியே, சோக வேகத்தால் சொல்லச் செய்தேயும் பிரஹ்மாவினுடைய
திருவருளால் எல்லா இலக்கணங்களோடு கூடி இருந்தாற்போலே.
உரைக்க வல்லார்க்கு
- மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும். தம் ஊர்
_________________________________________________
1. பட்டர் நிர்வாஹம்,
‘மடல் ஊர்ந்தாகிலும்’ என்று தொடங்குவது. பட்டர்
நிர்வாகத்திலே “இரைக்கும்” என்ற அடைமொழிக்கு,
பாவம் ‘ஓதம் கிளர்ந்த
கடல் போலே’ என்பது. ஓதம்-திரை. “இரைக்கும் கருங்கடல் வண்ணன்”
என்றது,
“மாசறு சோதி” என்றதனைச் சொல்லுகிறது. “கண்ணபிரான்”
என்றது, “ஆசறு சீலனை” என்றதனைச்
சொல்லுகிறது.
2. ஆழ்வார் நோவுபடாநிற்க,
ஊரில் நிறைவிற்குக் காரணம் யாது? என்ன,
‘இவர் கையும்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
3. இவர், முன்னடி தோற்றாமலே
மடல் ஊரச்செய்தே, சொன்ன இப் பத்து
இலக்கணங்களோடு கூடியிருந்தது என்பது பொருந்தியதாமோ?
என்ன ‘இவர்
முன்னடி’ என்று தொடங்கி அதற்கு விடையும் பிரமாணமும்
அருளிச்செய்கிறார்.
4. சமாக்ஷரை: சதுர்பி: ய:
பாதை: கீதோ மஹர்ஷிணா
ஸ: அநுவ்யாஹரணாத் பூய:
ஸோக: ஸ்லோகத்வமாகத:”
என்பது, ஸ்ரீராமா. பால. 2
: 40.
|