ந
நான்காம் திருவாய்மொழி
- “ஊரெல்லாம்”
முன்னுரை
ஈடு :-
1“நாடும்
இரைக்கவே-யாம் மடல் ஊர்ந்தும்” என்று பெரியதொரு மனோவேக ரசமாய் அன்றோ மேலே சென்றது,
2மடல் ஊரப் பெறுகைதான் அவனைப் பெறுவதைப் போன்று தேட்டமாம்படி பலக்குறைவு அதிகரித்தது;
3இனித்தான், மடல் ஊரும்போது தன்னால் காதலிக்கப்பட்ட பொருளைப் படத்திலே
எழுதவேணுமே, அதற்கு நேரம் இல்லாதபடி 4“ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப” என்கிறபடியே,
சூரியனை மறைத்தானாதல், இயல்பாகவே சூரியன் மறைந்ததாதல் செய்ய, அதனால் இராத்திரியாய்,
அதுதான் மாலை நேரம் அளவு அன்றிக்கே சராசரங்கள் முற்றும் அடங்கிய 5நடு இரவாய்,
பழிசொல்லுவாரோடு, அநுகூலராய் ஹிதம் சொல்லி விலக்குவாரோடு வாசி அற, எல்லாரும் ஒருசேர உறங்குகையாலே
ஓர் உசாத்துணையும் இன்றிக்கே, இவ்வளவிலே, பிரளய
_________________________________________________
1. மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்
செய்கிறார் ‘நாடும் இரைக்கவே’ என்று தொடங்கி.
2. இப்படி மனோவேகம் அதிகரித்தால்,
பின்னர் மடல் ஊராது ஒழிவான் என்?
என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மடல் ஊரப் பெறுகைதான்’
என்று தொடங்கி.
3. மடல் ஊராது ஒழிந்ததற்கு,
மற்றும் ஒரு காரணம் அருளிச்செய்கிறார்
‘இனித்தான்’ என்று தொடங்கி.
4. நாழிகை கூறிட்டுக்
காத்துநின்ற அரசர்கள் தம்முகப்பே
நாழிகை போகப்
படைபொருதவன் தேவகி தன்சிறுவன்
ஆழிகொண்டு அன்றுஇரவி
மறைப்பச் சயத்திர தன்தலையைப்
பாழி லுருளப் படைபொருதவன்
பக்கமே கண்டாருளர்.
என்பது, பெரியாழ்வார் திருமொழி.
‘சூரியனை மறைத்தானாதல்’
என்றது, ‘இவள் மடல் எடுத்தால் தனக்குத்
தாழ்வாம்’ என்னுமதனாலே சூரியனை மறைத்தானாதல் என்றபடி.
5. இத்திருவாய்மொழியில்
வருகின்ற “நள்ளிருளாய்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி, ‘நடு இரவாய்’ என்றும், “ஊரெல்லாம்”
என்றதனைத்
திருவுள்ளம்பற்றி, ‘பழி சொல்லுவாரோடு’ என்றும், “அன்னையரும்
தோழியரும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி, ‘அநுகூலராய்’ என்று
தொடங்கியும், “பாரெல்லாம் உண்ட” என்றதனைத்
|