பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
165

வளைத்துப் பிடித்த வில்வலியையுடையவனும் வருகின்றிலன். பகைவர்கள்மேல் காயாநிற்பதாய், பகைவர் பக்கல் பெருமாள் கண் பார்க்கிலும் தான் கண் பாராத படியான வில் ஆதலின் ‘காயும் கடும் சிலை’ என்கிறாள். அவனது 1சாங்கம் என்னளவிற் கண்டிலேன். பிராட்டிக்கு உதவினதும் ‘தனக்கு உதவிற்று’ என்றிருக்கிறாளாதலின் ‘என் காகுத்தன்’ என்கிறாள். 2“தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன் தஞ்சம் என்று நான் தஞ்சமாக நினைத்திருக்குமவனும் வருகின்றிலன். 3“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்” என்கிறபடியே, பிராட்டியுடைய விராதியைப் போக்கியது அவளுக்குக் காரியம் செய்தானாக நினைத்திருக்கை அன்றிக்கே, தன்சினம் தீர்ந்தானாயிருக்குமவன். மேலே, “கண்ணனும் வாரானால்” என்றாள்; முடி சூடிய அரசபுத்திரர் அல்லாதார்தாம் தவிருகிறார்கள், முடிசூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்? 4ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே! என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள். அன்றிக்கே, பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவனும் வருகின்றிலன் என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள் என்னலுமாம். 5“அபியாதா - முன் செல்பவர்” - பகை

_____________________________________________________

1. சாங்கம்-அன்பும், வில்லும்.

2. திருவாய் 3 : 6 : 8.

3. பெண்களுக்குத் தஞ்சமாக இருப்பவன் கிருஷ்ணன் அன்றோ, ஸ்ரீ ராமபிரான்
  தஞ்சமாக இருப்பாரோ? என்ன, பெண்களுடைய காரியத்தைத் தன் பேறாகச்
  செய்யுமவராகையாலே தஞ்சம் என்கிறார் ‘சினத்தினால்’ என்று தொடங்கி.
  இது, திருப்பாவை 12. இப்பாசுரத்திற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
  ‘பிராட்டியுடைய’ என்று தொடங்கி.

4. தான் தனக்கு வெலற்கரிய தானவரைத் தலைதுமித்து என்
  வான் தரக்கிற் றிகொல் என்று குறை இரப்ப வரம்கொடுத்தாங்கு
  ஏன்றெடுத்த சிலையினனாய் இகல்புரிந்த இவர் குலத்தோர்
  தோன்றலைப்பண் டிந்திரன்காண் விடைஏறாய்ச் சுமந்தானும்.

  என்பது, கம்பராமாயணம்.

5. தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவர் என்பதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார் “அபியாதா” என்று.

  “அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”

 
என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.