|
வர
வர்கள் வரப் பொர
இருக்கை அன்றிக்கே, எடுத்துவிட்டுப் பொருகையும் தமக்கே பணியாயிருக்கும். “பிரஹர்த்தாச-அடிப்பவர்”
- தூசித்தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதாயிருக்கும்.
“சேநாநய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக
வகுத்துவிட்டால், ஒருசேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படைகோக்க வல்லவர்.
மாயும் வகை அறியேன்-இவன் வாராமை அறிந்தால் இனி முடிந்துபோதல் அன்றோ சுகம், முடியும் விரகு
அறிகின்றிலேன். வல்வினையேன்-முடிந்துபோதல் சுகமாய்த் தேட்டமானால் அதுவும் கிடையாதபடியான
பாவத்தைச் செய்தேன். என்றது, பாபமானது, அழிவிற்குக் காரணமாகை அன்றிக்கே ஜீவித்தற்குக்
காரணம் ஆவதே! என்றபடி. 1ஜீவிக்கை தேட்டமானபோது அரிதாம், முடிந்துபோதல் தேட்டமான
போது அரிதாம், ஏதேனுமாக வேண்டாததைக் கொடுப்பது பாபமாமித்தனை அன்றோ. பெண் பிறந்தே -
2பரதந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்தபோது முடியப்போமோ. பிறர்க்காக
ஜீவிக்க வேண்டும் பரதந்திரமான பிறவியிலே பிறத்தற்குத் தகுதியான மஹாபாவத்தைச் செய்தேன்.
3“பெண்கள் பாவங்களுக்குக் காரணமானவர்கள், பாவத்தால் வந்தவர்கள்” என்னக்கடவதன்றோ.
4“நசாஸ்ய
மாதா” - பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே ‘இவன்
____________________________________________________
1. புண்ணியமே ஜீவித்தற்குக்
காரணமாகும், பாவமும் ஜீவிப்பதற்குக் காரணம்
ஆமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
ஜீவிக்கை
தேட்டமானபோது’ என்று தொடங்கி.
2. “வல்வினையேன்” ஆகையாலே,
“மாயும் வகை அறியேன்” என்று கூட்டி,
பாவம் அருளிச்செய்து, இப்பொழுது, “பெண் பிறந்தே மாயும்
வகையறியேன்
வல்வினையேன்” என்று கூட்டி வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘பரதந்திர ஜன்மத்திலே’
என்று தொடங்கி.
3. பெண்பிறவி அப்படிப்
பாவத்தின் பலமாகுமோ? என்ன, ‘ஆம்’ என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதற்குப் பிரமாணம்
அருளிச்செய்கிறார் ‘பெண்கள்’
என்று தொடங்கி.
“நாஸாநாம் ஆகர: க்ரோத:
ஆஸா பரிபவாகர:
வியாதீநாம் ஆகர: தோயம்
பாபாநாம் ஆகர: ஸ்திரிய:”
என்பது, மஹாபாரதம்.
4. பரதந்திரப் பிறவியிலே
பிறந்தார்க்கு நினைத்தபோது முடியப் போகாது
என்பதற்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘நசாஸ்ய மாதா’
என்று தொடங்கி.
|