பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
169

பிரிவும் பொறுக்க மாட்டாமல் இருக்கிற பெண்கள் அநுபவிக்கிற மஹா துக்கத்தைக் காண்கின்றிலேன் என்று. 1சர்வ ரக்ஷகன் பொறுக்குமித்தனை போக்கிப் பாதுகாத்தலிலே ஏகதேசம் சேர்ந்தவர்களுக்குப் பொறுக்கப்போமோ? புருஷோத்தமன் பொறுக்குமித்தனை போக்கிப் புருஷர்களால் பொறுக்கப் போமோ? ஒண்சுடரோன் வாராது ஒளித்தான் - 2தன் தோற்றரவிலே எல்லாக் கிலேசங்களும் போகும்படியான பிரகாசத்தையுடையவனும் வாராதே மறைந்தான். 3“அந்தப் பரம்பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது” என்கிறபடியே, பகவானுடைய கட்டளையாலே முப்பது வட்டம் வரவேணுமேயன்றோ, அதுவும் செய்திலன் என்பாள் ‘வாராதே’ என்கிறாள். இங்ஙனமிருப்பவன் ‘ஈச்வரன் ஆணையை மறுத்தால் வேணுமாகில் தலையை அறுத்து வைக்குமித்தனை அன்றோ, இக்கொடுமை என் கண்களால் காணப்போகாது’ என்று ஈசுவரபடர் தேடி வந்தாலும் காணாதபடி மறைந்தான் என்பாள் ‘ஒளித்தான்’ என்கிறாள். 4“ஒளி

____________________________________________________

1. “இம்மண்ணளந்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றி, குறிப்புப் பொருளாக
  வெறுப்பிலே பாவம் அருளிச்செய்கிறார் ‘சர்வ ரக்ஷகன்’ என்று தொடங்கி,
  “கண்பெரிய செவ்வாய் நம் காரேறு” என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
  பாவம் அருளிச்செய்கிறார் ‘புருஷோத்தமன்’ என்று தொடங்கி. என்றது,
  பாதுகாத்தலிலே ஏகதேசம் சேர்ந்தவனுமாய், பலருள் ஒருவன் என்று
  சொல்லப்படுபவனுமான சூரியனும் கூடப் பொறுக்கமாட்டாதே இருக்க, சர்வ
  ரக்ஷகனுமாய்ப் புருஷோத்தமனுமாய் இருப்பவன் இதனைப்
  பொறுத்திருப்பதே! என்றபடி.

2. “ஒண்” என்ற சொல்லிற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘தன் தோற்றரவிலே
   எல்லாக் கிலேசங்களும் போகும்படியான பிரகாசம்’ என்று.

3. “பீஷா அஸ்மாத் வாத: பவதே”

  என்பது, தைத்திரீயகோபநிடதம். 8.

  நெடுங்கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நிற்றலுங் கால்
  ஒடுங்கி நடப்பதும் தண்கார் பொழிவதும் ஊழிதனில்
  சுடுங்கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
  அடுங்கன லாழி அரங்கேசர் தம்திரு ஆணையினே.

  என்பது, திருவரங்கத்து மாலை.

  முப்பது வட்டம்-முப்பது நாழிகைக்கு ஒரு வட்டம்.

4. “ஒளித்தான்” என்பதற்கு, தான் ஒளிக்கும்போது தேர் முதலான
   சின்னங்களை வைத்துப் போகாமல் அவற்றோடே ஒளித்தான்