|
யவன
யவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று” என்னக் கடவதன்றோ. 1அன்றிக்கே, “சுழன்றிலங்கு வெங்கதிரோன்
தேரோடும் போய்மறைந்தான்”, 2“அந்தத் தூசியும் காணப்படவில்லை” என்பன போன்று,
வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான் என்னுதல்.
இம் மண் அளந்த -
3இந்தப் பூமிக்கு என்ன துயர் உண்டாக அளந்து கொண்டான். 4பூமிக்கு
மஹாபலியால் உண்டான இடரினளவோ எனக்கு இரவால் உண்டான இடர்? 5வரையாமல் எல்லாரையும்
காக்குமவன். கண் பெரிய செவ்வாய் நம் கார் ஏறு வாரானால்-கிருபையால் பெரியனாய்ப் பூமியை
அளந்து, பூமியிலுள்ளார் இடர் போகும்படி குளிரக் கடாக்ஷித்து, அதனால் உண்டான பிரீதியின் மிகுதி
தோற்றப் புன்முறுவல் செய்கையாலே சிவந்த அதரத்தை உடையவனான நம் கார் ஏறு வருகின்றிலன். எல்லார்
விஷயமாகச் செய்யும் ரக்ஷணத்தையே இயல்பாகவுடையவன் என்பாள் “நம்” என்கிறாள். சர்வ
ரக்ஷகனுடைய காக்கப்படும் பொருள்களில் தானும்
____________________________________________________
என்று பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி,
அதற்கு மேற்கோள் காட்டுகிறார்
‘ஒளியவன்’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி, 8. 5 :
2. என்றது,
‘சின்னங்களை வைத்துப் போனால் மீளவும் அவற்றிற்காக வரவேண்டி
இருக்கும், அப்போது
பெண் பிறந்தார் துன்பத்தைக் காண வேண்டி வரும்’
என்று அவற்றையும் கொண்டு ஒளித்தான் என்றபடி.
1. “ஒளித்தான்”
என்பதற்கு, வேறும் ஒரு கருத்தும், அதற்குப் பிரமாணமும்
அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று
தொடங்கி. “சுழன்றிலங்கு” என்பது,
பெரிய திருமொழி, 9. 4 : 6.
2. “தூரீபூதோ ஹரி: யே ந
ஸ: அபி ரேணு: ந ல க்ஷ்யதே”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 :
31.
என்றது, வருவதற்குச்
சூசகமும் காண ஒண்ணாதபடி மறைந்து விட்டான்
என்றபடி.
3. “இ” என்ற சுட்டுக்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இந்தப் பூமிக்கு’ என்று
தொடங்கி.
4. மஹாபலியால் பூமிக்குத்
துயர் உண்டோ? எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பூமிக்கு’ என்று தொடங்கி.
5.
“மண்ணளந்த” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘வரையாமல்’ என்று
தொடங்கி.
|