|
New Page 1
சேர்ந்தவள் ஆகையாலே
1‘நம்’ என்கிறாள் என்பது கருத்து. இவற்றைக் காப்பாற்றுகையாலே தன் நிறம் பெற்றிருப்பவன்
என்பாள் ‘கார்’ என்கிறாள். ‘அது தன் பேறு’ என்னுமிடம் தோற்ற மேனாணித்திருப்பவனாதலின்
‘ஏறு’ என்கிறாள். இரக்க வேண்டா, அளக்க வேண்டா, வடிவைக் காட்ட அமையம் என்பாள்,
“வாரானால்” என்கிறாள். இனி, ‘என் கார் ஏறு’ என்று பாடமானபோது, பண்டு என்னோடே
கலந்ததனாலே தன் நிறம்பெற்று மேனாணித்திருந்தவன் என்று பொருள் கூறுக. 2எண் பெரிய
சிந்தை நோய் - “எவன் அறியாதவனாக எண்ணுகிறானோ அவன் அறிந்தவன், எவன் அறிந்தவனாக எண்ணுகிறானோ
அவன் அறியாதவன்” என்கிறபடியே, வேதாந்தங்கள், நிலம் அன்று என்று மீண்ட பகவத் விஷயத்தை,
3இத்தனை போதும் பேசினார்; தம்முடைய சிந்தையின் வியாகுலம் மயர்வற மதிநலம்
அருளப்பெற்ற ஞானத்துக்கும் அறிய முடியாததாயிருந்தது. ‘எண் பெரியது’ என்னுமித்தனை,
‘இவ்வளவு’ என்னப் போகாது. 4பிரிந்த விஷயத்துக்குத் தக்கதாய் அன்றோ சிந்தையின்
வியாகுலம்தான் இருப்பது, அதற்கு ஒரு முடிவு இல்லையே. 5“கண்ணனை அடையப் பெறாமையால்
பெருந்துன்பத்தை அடைந்தவளாய் எல்லாப் பாவங்களினின்றும் நீங்கினவள்” என்றாற்போலே.
____________________________________________________
1. “நம்” என்பது, உளப்பாட்டுத்
தன்மைப் பன்மை.
2. “எண் பெரிய” என்றது,
எண்ணுக்கு அகப்படாத என்றபடி.
“யஸ்யமதம் தஸ்ய மதம். .
. .அவிஜ்ஞாதம் விஜாநதாம்”
இது, கேந உபநிடதம்.
3. ‘இத்தனை போதும் பேசினார்’
என்றது, “இம்மண்ணளந்த” என்பது முதலாகப்
பேசினார் என்றபடி.
4. “எண் பெரியது” என்பதற்குக்
காரணம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பிரிந்த விஷயத்துக்கு’ என்று தொடங்கி.
‘அதற்கு’
என்றது, எல்லாப் பிரகாரத்தாலும் வேறுபட்டதான பகவத் விஷயத்துக்கு
என்றபடி.
5. விஷயத்துக்குத் தகுதியாக
இருக்கும் துன்பம் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘கண்ணனை’ என்று தொடங்கி.
“தச்சித்த விமலாஹ்லாத
க்ஷீண புண்ய சயா ததா
ததப்ராப்தி மஹாதுக்க விலீநா
ஸேஷ பாதகா.”
“சிந்தயந்தீ ஜகத்ஸூதிம்
பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்வாஸதயா முக்திம்
கதா அந்யா கோபகந்யகா.”
என்பன, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5.
13 : 21-22.
|