|
ச
சிந்தை நோய்
தீர்ப்பார் ஆர் - 1மனத்தின் துன்பம் போமித்தனையே வேண்டுவது, அவனை மறக்கவும்
அமையும். 2“ஏது செய்தால் மறக்கேன்” என்னுமவர்கள் அலரோ இவர்கள்தாம். 3அவனை
மறக்கவுமாம் நினைக்கவுமாம், துன்பம் போமித்தனையே வேண்டுவது. இப்போது ‘மறக்கவும் அமையும்’
என்றது, மறத்தல் உத்தேஸ்யமாகச் சொன்ன வார்த்தை அன்று; ஓடுகிற துன்பத்தின் மிகுதியைச்
சொன்னபடியேயாம். 4பிரிவு நிலையில் நினைவுதான் மிகுந்த ஆற்றாமைக்குக் காரணமாய்
இருக்குமே அன்றோ; “5கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்” “காட்டேன்மின் நும்முரு
என் உயிர்க்கு அது காலன்” என்னக்கடவ வன்றோ. என்னையே - 6இவள் ஒருத்திக்குமே
உள்ளது ஒரு வியசனமாயிற்று; ஆதலின், ‘என்னையே’ என்கிறாள். நாட்டார் நினைத்துத்
துக்கங்களைப் போக்கிக் கொண்டு போகாநின்றார்களே அன்றோ, 7சாதன புத்தியாக
இழிந்தவர்கட்கு அது செய்யலாமிறே, 8“தியானிக்கக்கடவன்” என்ற நினைவு தன்னையே
விதியாநின்றதே
_____________________________________________________
1. மனத்தின் துன்பம்
அவனை மறந்தால் ஒழியத் தீராதே? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘மனத்தின் துன்பம்’
என்று தொடங்கி.
2. மறத்தல் உத்தேசியமாமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஏது செய்தால்’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி.
3. “ஏது செய்தால் மறக்கேன்”
என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘அவனை மறக்கவுமாம்’ என்று தொடங்கி.
4. மறத்தல் தேட்டமாகைக்கு,
நினைவுதான் அப்படித் துக்க ரூபமாய்
இருக்குமோ? என்ன, ‘பிரிவு நிலையில்’ என்று தொடங்கி அதற்கு
விடை
அருளிச்செய்கிறார்.
5. பிரிவு நிலையில் நினைவு
ஆற்றாமைக்குக் காரணம் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் “கண்ணன்” என்று தொடங்கி. இது,
திருவாய். 9, 5 : 8.
“காட்டேன்மின்” என்பது, திருவாய். 9. 5 : 7.
6. “என்னையே” என்ற ஏகாரத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘இவள்’
என்று தொடங்கி. அல்லாதார்க்கு அது இல்லையோ? என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘நாட்டார்’ என்று தொடங்கி.
7. தமக்கும் அப்படிச் செய்ய
ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘சாதன புத்தியாக’ என்று தொடங்கி.
8. நினைவிற்குச்
சாதனத்வம் உண்டே? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தியானிக்க’ என்று தொடங்கி.
|