|
க
கின்றதுமாய்ப் பிரகாசமுமாய் இருக்கின்ற கண் இந்திரியத்தை,
அறியப்படுகின்ற பொருளான இருள் வந்து மூடா நின்றது என்பாள் ‘கண் புதைய மூடிற்றால்’ என்கிறாள்.
அன்றிக்கே, இருளினை ஒத்த நிறத்தினையுடையவன் வந்து முன்னே நின்றாலும் காண ஒண்ணாதபடி, இரவாகிற
ஊழி கண்களை மறையாநின்றது என்னலுமாம்.
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்-1“எப்போதும்
கைகழலா நேமியான்” என்கிறபடியே, அடியார்கட்குப் பகைவர்கள் உண்டான போதாக ஆயுதம் எடுக்கப்
பார்த்திராமல், எப்போதும் ஒக்கக் கையிலே விடாதே கொண்டிருப்பவனாதலின், ‘மன் நின்ற
சக்கரம்’ என்கிறது. 2பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளை அழைக்க வல்ல ஆச்சரியத்தை
உடையவனாதலின், ‘மாயவன்’ என்கிறது. இதனால், போக்குகின்ற பொருளைக் கொண்டு,
போக்கப்படுகின்ற பொருளை அழைக்குமவனுக்கு, போக்குகின்ற பொருளைக் கொண்டு போக்கப்படுகின்ற
பொருளைப் போக்குவிக்கத் தடை உண்டோ? என்பதனைத் தெரிவித்தபடி. 3இங்குச் சங்கல்பம்
அழிய
_____________________________________________________
1. எப்போதும் கை கழலா” என்பது, பெரிய திருவந்தாதி,
87.
2. பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளை அழைத்தது,
பாரதத்தில்
பதினான்காம் போரில்.
பாராழி அவலமறப் பாண்டவர்தம் இடர்தீரப் பார்த்தன்
வாழப்
பேராழி அறிதுயிலும் பெருமிதமும் உடன்மறந்து பிறந்த
மாயோன்
ஓராழி எழுபரித்தே ருடையானை மாயையினால் ஒழிக்கத்
தன்கைக்
கூராழி பணித்தலுமக் களம்போலச் சிவந்தனஅக் குடபால்
எங்கும்.
என்பது, வில்லிபாரதம்.
3.
“மன்னின்ற சக்கரத்து எம் மாயவன்” என்பதற்கு, பிரகாசத்தையுடைய
பொருளைக்கொண்டு இருளை அழைக்க
வல்ல ஆச்சரிய பூதன் என்று
மேலே ஒரு கருத்து அருளிச்செய்தார். இப்பொழுது, ‘ஆயுதம் எடேன்’
என்று
கூறி வைத்துப் பின்னர் வீடுமனை அழிப்பதற்காக ஆயுதத்தை
எடுத்த ஆச்சரியத்தையுடையவன் என்று வேறும்
ஒரு கருத்து
அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றி, “வாரானால்” என்பதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார்
‘இங்கு’ என்று தொடங்கி. ‘சங்கல்பம் அழிய வேண்டா’
என்றது, சங்கல்பத்தையும் அழித்து ஆயுதத்தை
எடுத்தலாகிற முயற்சியும்
வேண்டா என்றபடி. ‘நினைக்க அமையும்’ என்றது, வருவதற்குத் தன்
இச்சையே
ஒழிய வேறு ஒரு வருத்தமும் இல்லாமையைத் தெரிவித்தபடி.
|