|
New Page 1
வேண்டா; வருவதாக நினைக்க
அமையும். 1“என்னுடைய இச்சையினாலே அவதரிக்கிறேன்” என்கிறபடியே, வருவதாக நினைக்க
அமையும் என்றபடி. 2‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கையும், பிரகாசத்தையுடைய
பொருளை இட்டு இருளைப் போக்கக் கடவது என்கிற மர்யாதையைக் குலைக்கையுமாகிற இவை வேண்டா, தான்
வர அமையும்; போக்குகின்ற பொருளின் தன்மையினாலே போகின்ற பொருள் தன்னடையே போகும்.
3இவ்விடத்தே இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் - முடிய வேண்டுமளவிலே நூறே
பிராயமாக இருக்கிற இவ்வாத்மாவை முடித்து நோக்குவார் ஆர்? 4“இவன் வெட்டத் தகாதவன்,
இவன் கொளுத்தத் தகாதவன், நினைக்கத் தகாதவன், வாட்டத் தகாதவன்” என்கிற வசனத்தைக்கொண்டு
நின்று வழக்குப் பேசாநின்றதாயிற்று ஆத்மவஸ்து. 5இதனை முடித்து நம்மை நோக்குவார்
ஆர்? என்கிறது என்று இப்படி முறுகச் சொன்னது தன்னை, இச்சொல்லுக்குக் கருத்துரையாக ஒரு தமிழ்ப்
புலவன் இட்டு வைக்கிறான்
____________________________________________________
1. இச்சை காரணமாக அவன்
வருவதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘என்னுடைய’ என்று தொடங்கி.
“அஜோபிஸந் அவ்யயாத்மா
பூதாநாம் ஈஸ்வரோபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய
ஸம்பவாமி ஆத்ம மாயயா”
என்பது, ஸ்ரீ கீதை. 4 : 6.
2. மன்னின்ற சக்கரத்து
எம் மாயவன்” என்பதற்கு, மேலே அருளிச்செய்த
இரண்டு கருத்துக்களையும் நியமிக்கிறார் ‘ஆயுதம்
எடேன்’ என்று
தொடங்கி. வந்தால் போதியதாமோ? இருளைப் போக்க வேண்டாவோ?
என்ன,
‘போக்குகின்ற’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. “இவ்விடத்தே” என்பது,
இந்த நிலையிலே என்றாய், முடிய வேண்டுமளவிலே
என்றபடி. “நீள்” என்பதற்குப் பொருள், ‘நூறே
பிராயமாக இருக்கிற’
என்பது.
4. “நீள் ஆவியாய்க் கொண்டு
நின்ற” என்றதனால், பலித்த பொருளை
அருளிச்செய்கிறார் ‘இவன் வெட்டத் தகாதவன்’ என்று தொடங்கி.
“அச்சேத்ய: அயம் அதாஹ்ய:
அயம் அக்லேத்ய: அஸோஷ்ய ஏவச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணு:
அசல: அயம் ஸநாதந:”
இது, ஸ்ரீ கீதை. 2 : 24.
5. “நீள் ஆவி காப்பார் ஆர்” என்பது, இதனை முடித்து நோக்குவார் யார்
என்னும் பொருளைக் காட்டுமோ? என்ன,
பொருளாற்றலால் இப்பொருள்,
சித்திப்பதாம் என்று கொண்டு அதற்குச் சம்வாதம் காட்டுகிறார்
‘இதனை
முடித்து’ என்று தொடங்கி.
|