|
க
காக்கின்றவர் ஆகவோ.
1பாதுகாக்கின்றவன் வரவு தாழ்த்தாலும் இப்புத்தி பிறவாதிருக்கக்கூடிய இவள் இப்போது
‘காப்பார் ஆர்’ என்று இவ்வார்த்தை சொல்லும்படி காணும் இவளுக்குப் பிறந்த நிலைவேறுபாடு,
2“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வாலங்காம் - திருவடி, பிராட்டியைப் பார்த்து
‘பெருமாள்பக்கல் 3இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன, இராக்ஷசர்கள்
நெருங்கியிருக்கிற இதனை இராமசரம் நிறைவுற்றதாக்கிக்காண் நாம் போவது, வேற்று மனிதர் முகத்தில்
விழித்துப் போகவோ? பரபுரார்த்தந:-அவரோடே பகைகொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு
படைவீடு உண்டோ? மாம் நயேத்யதி - 4‘நயாமி பரமாம் கதிம்-மேல்கதிக்குக் கொண்டு
போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ? காகுஸ்த்த :- இந்திரனுடைய பகைவர்களையும்
போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ? தத் தஸ்ய சத்ருசம் பவேத்-
_____________________________________________________
1. சர்வேச்வரன் ரக்ஷகனாக
இருக்க, “காப்பார் ஆர்” என்னலாமோ? என்ற
சங்கையிலே அருளிச்செய்கிறார் ‘பாதுகாக்கின்றவன்’
என்று தொடங்கி.
‘இப்புத்தி’ என்றது, “காப்பார் ஆர்” என்கிற புத்தியை.
2. ரக்ஷகன் வரவு தாழ்த்தாலும்
இந்தப் புத்தி பிறவாமல், ‘அவனே ரக்ஷகன்’
என்று அறுதியிட்டிருந்தாளோ? என்ன, ‘இருந்தாள்’
என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘சரைஸ்து சங்குலாம்’ என்று தொடங்கி.
ஸரைஸ்து ஸங்குலாம்
க்ருத்வா லங்காம் பரபுரார்த்தந:
மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”
என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30.
பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
3. ‘இனி எழுந்தருள அமையாதோ’
என்றவிடத்தில், ‘இனி’ என்றதற்குக்
கருத்து, திருவடி, சிறிய உருவத்தோடு நின்று ‘பெருமாள்பாடு
ஏற வாரும்’
என்ன, ‘நீ இருக்கிற இவ்வாகாரத்தாலே எப்படிக்கொண்டு போவாய்’
என்ன, விஸ்வரூபத்தைக்
காட்டி ‘இனி, எழுந்தருள அமையாதோ?’
என்கிறான் என்பது.
4. “மாம் நயேத்யதி - என்னைக் கொண்டு போவாராகில்” என்கைக்குக்
கொண்டுபோதல் நிச்சயமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
“நயாமி பரமாம் கதிம்” என்று. இது, வராக சரமஸ்லோகம்.
|