|
1அவர
1அவர்க்குத்
தகுதியாகவுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக அவர்க்கு
நிறக் கேடானவற்றைச் செய்யவோ?”
2‘இராமன் தேவியை ஓர் அரக்கன்
பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல், ‘ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற
இது, அவர் வில்வலிக்கு வசையாம் காண்; 3அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;
4அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ? 5இராம
தனத்தை ‘என்னது’ என்றாரோடு
____________________________________________________
1. “என்னை அழைத்துக்கொண்டு போதல் அவர்க்குத்
தக்கது” என்றபோதே,
நாம் நம்மை நோக்குதல் அவர்க்குத் தாழ்வாம் என்ற பொருள் தோன்றுமே
அன்றோ, அங்ஙனம் தோன்றும் பொருளை அருளிச்செய்கிறார் ‘அவர்க்கு’
என்று தொடங்கி.
2. நிறக்கேடாம் பிரகாரத்தைக் காட்டுகிறார்
‘இராமன் தேவியை’ என்று
தொடங்கி. இங்கு,
அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும்என்
சொல்லி னாற்சுடு வேன்அது தூயவன்
வில்லி னாற்றற்கு மாசுஎன்று வீசினேன்.
அன்றி யும்பிறி துள்ளதொன் றாரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி
நன்றி என்பதம் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ.
வேறு முண்டுரை கேளது மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனியல் லால்இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண்எனக்
கூறு மிவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?
என்ற கம்பராமாயணச் செய்யுள்கள் நினைவு கூர்தல் தகும்.
3. மேற்காட்டிய சுலோகத்திலேயுள்ள “காகுஸ்த்த:”
என்ற பதத்தைக்
கடாக்ஷித்துச் சிலேடையாக அருளிச்செய்கிறார் ‘அவர் வம்சத்துக்கு’ என்று
தொடங்கி.
‘வம்சம்’ என்பது, மூங்கில்; அது, ஆகுபெயராய் வில்லினைக்
காட்டுகிறது.
4. மேலே கூறிய ‘அவருக்குத் தகுதியாக உள்ளனவற்றை’
என்ற வாக்கியத்தின்
விவரணம் ‘அவர் விஷயத்தில்’ என்று தொடங்கும் வாக்கியம்.
5. தன்னைத்தானே
பாதுகாத்துக்கொள்ளுதல், இராவணன் செயலைப் போன்று
கொடியதாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இராம தனத்தை’
என்று தொடங்கி.
|