பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
184

ஒப

ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத் தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள். எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக்கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு அஞ்சினபடியாலே அன்றோ ‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது. 1“ஸ்ரீ ராமபிரானுடைய திருக்கைகளை அடைந்திருந்தாளாகையாலே யானைக்கூட்டங்களையும் சிங்கக்கூட்டங்களையும் புலிக்கூட்டங்களையும் கண்டு அச்சத்தை அடையவில்லை;” ஸ்வரூபத்தோடு கூடியிருக்கின்ற பெண்தன்மை போயிற்று, கணையத்துக்குள் இருப்பவர்கள் அச்சத்திற்குக் காரணமான பொருள்களைக் கண்டு அஞ்சமாட்டார்கள் என்றபடி. யானைக்கூட்டங்கள் சிங்கக் கூட்டங்கள் அல்லவே அன்றோ இது. காப்பார் ஆர் இவ்விடத்து-2‘காக்கப்படுகின்ற பொருள் இவை, காக்கின்றவன் அவன்’ என்று தெளிந்து அறுதியிட்டு, ‘அம்ம’ என்று அப்புத்தட்டி இருந்தவளே அன்றோ, இப்போது ‘காப்பார் ஆர்’ என்கிறாள்; பிறந்த ஆற்றாமையின் மிகுதியாலே. அவனுடைய சர்வரக்ஷகத்வம் 3ஓர் அச்சாய் அன்றோ

____________________________________________________

1. அச்சத்திற்குக் காரணங்கள் உளவானாலும் அஞ்சாதிருந்தாளோ? என்ன,
  ‘அஞ்சாதிருந்தாள்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
  ‘ஸ்ரீராமபிரானுடைய’ என்று தொடங்கி.

  “கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா வனம் ஆஸ்ரிதா
   நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூராமஸ்ய ஸம்ஸ்ரிதா”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 60 : 20.

  கணையம் - கோட்டை. இது - தோள்வலி.

2. பிரணவத்தில், அகாரத்திலே சொல்லுகிற அவனுடைய ரக்ஷகத்வத்தையும்,
  மகாரத்தில் சொல்லுகிற தன்னுடைய ரக்ஷ்யத்வத்தையும் நினைத்து அச்சம்
  அற்று இருக்குமவள் கண்டீர் கலங்கினாள் என்று சுவாப தேசத்திலே
  அருளிச்செய்கிறார் ‘காக்கப்படுகின்ற பொருள்கள்’ என்று தொடங்கி.
  ‘அம்ம’ என்பது, சிலேடை: அம்மா என்று மகிழ்ச்சியினால் சொல்லும்
  வார்த்தை என்றும், அகாரவாச்சியனான சர்வேச்வரனுக்கு மகாரவாச்சியனான
  ஆத்மா காக்கப்படுகின்ற பொருள் என்றும் பொருளாம். அப்புத்தட்டி-துடை
  தட்டி என்றும், நினைத்து என்றும் பொருளாம்.

3. ‘ஓர் அச்சாய்’ என்றது, சிலேடை: அச்சிலே அந்தர்ப்பூதமான அகாரத்தாலே
  சொல்லப்படுகின்ற பொருளாய் என்பது நேர்பொருள். ஏக ரூபமாய் என்பது
  வேறும் ஒரு பொருள். ‘அல்லிலே’ என்றதும்,