|
சூர
சூரியர்கள் வேணுங்காணும்
இந்த இருளைப் போக்கும் போது. 1“ஆங்கத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம்
வானில் பகரும் மதி என்றும் பார்த்து” என்று சொல்லக் கடவதன்றோ.
2பண்டே
இவள் கைகண்டு வைத்தமையன்றோ இவைதாம். 3இருளோடே சீறுபாறு என்று போக்குவான்
ஒருவனும், இருளோடே கண்கலந்து நின்று போக்குவான் ஒருவனுமாயிற்று. தூய்மையை ஸ்வபாவமாகவுடைத்தான
வெண்சங்கு ஆதலின் 4‘தூப்பால வெண்சங்கு’ என்கிறாள். அன்றிக்கே, பால்
என்பது, இடமாய், குறைவற்ற இடத்தையுடைத்தான 5வெண்சங்கு என்னுதல்; 6“பெரு
முழக்கு” என்றும், 7“நன்றாக நிரம்பின மத்தியினின்றும் வெளிக்கிளம்பின ஒலியையுடைய
ஸ்ரீபாஞ்சசன்னியம்” என்றும் சொல்லப்படுவது அன்றோ. ஆயின், ‘தூய்மை’ என்ற சொல் குறைவறுதல்
என்ற
____________________________________________________
1. சங்கு சக்கரங்களைச்
சந்திர சூரியர்களாகக் கூறியதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘ஆங்கத்திகிரி’ என்று தொடங்கி.
இது, மூன்றாந் திருவந். 67.
இங்கு, சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில் 41 முதல்
51 வரி முடிய உள்ள பகுதியை ஒப்புநோக்கல் தகும்.
2. இந்தச் சந்திர சூரியர்கள்
வந்தால் இருள் போமோ? என்ன, ‘பண்டே’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘கை கண்டு’
என்பதற்கு, கையிலே கண்டு என்றும், அநுபவித்து என்றும் இரண்டு
பொருள்.
3. உலகத்தில் சந்திர சூரியர்கள்
இருளைப் போக்கும் விதம் எப்படி? என்ன,
‘இருளோடே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
சீறுபாறு என்று போக்குமவன் - சூரியன். கண்கலந்து போக்குமவன் -
சந்திரன்.
4. இப்பொருளில் “வெண்சங்கு”
என்பதில், வெண்மை என்பது அடைமொழி
அன்று. சங்கு என்ற மாத்திரையாய் நின்றது.
5. இங்கு, வெண்மையையுடைய
சங்கு என்பது பொருள்.
6. இரண்டாவது பொருளில்
‘குறைவற்ற இடத்தையுடைத்தான வெண்சங்கு’
என்று கூறியதற்குப் பயன் யாது? என்ன, ‘பெருமுழக்கு’ என்று
தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
7. “ஸ பாஞ்சஜந்ய: அச்யுத
வக்த்ரவாயுநா ப்ருசம்
ஸு பூர்ண உதர நிஸ்ஸ்ருத
த்வநி:”
என்பது, பாரதம் துரோண
பர்வம்.
|