பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
187

New Page 1

பொருளைக் காட்டுமோ? எனின், ‘அவன் இவ்வர்த்தத்தில் குறைவற்றவன்’ என்று சொல்ல வேண்டுவதனை ‘அவன் இவ்வர்த்தத்திலே தூயன்காண்’ என்று வழங்கும் வழக்கு உண்டே அன்றோ. இலக்ஷணை இருக்கிறபடி. அன்றிக்கே, தூய்மையாலும் வெண்மையாலும், வெளுப்பின் மிகுதியைச் சொல்லுகிறதாகவுமாம்; அப்போது 1வேறுசொல் இடையில் வரலாகா. வந்திருப்பதனால், அவ்வாறு பொருள் கூறுதல் பொருத்தம் அன்று.

    தீப் பால வல்வினையேன்-தீய தன்மையையுடைத்தாய்ப் பேர்க்கப் பேராதபடி மிகுந்த பாவத்தைச் செய்த நான். என்றது, 2காப்பாற்றுதலையே தனக்குச் சங்கல்பமாகக் கொண்டு, காப்பாற்றுதற்குச் சம்பந்தமுள்ளவனாய், அதற்காகவே கருவி பிடித்திருக்கிறவனுங்கூட உதவாதபடியான பாபம் என்றதனைத் தெரிவித்தபடி. தெய்வங்காள் என் செய்கேனோ-3தெய்வங்களோடு இவளுக்கு ஓர் ஒப்புமை உண்டு; அவர்கள் பிறப்புத் தொடங்கியே

____________________________________________________ 

1. ‘வேறு சொல் இடையில் வரலாகாது’ என்றது, “தூ” என்ற சொல்லிற்கும்,
  “வெண்” என்ற சொல்லிற்கும் இடையில் “பால” என்ற சொல்
  வந்திருப்பதனால் என்றபடி. “தூ, வெண்” என்ற இரண்டினையும் ஒரு
  பொருட்கிளவிகளாகக்கொண்டு பொருள் கூறுமிடத்து, அவ்விரண்டும்
  சேர்ந்தே வரல் வேண்டும்; இடையில் “பால” என்ற சொல் வரலாகாது
  என்றபடி.

2. “சங்கு சக்கரத்தன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி, ‘காப்பாற்றுதலையே’
   என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

3. உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாத இவள், “தெய்வங்காள் என்
  செய்கேனோ” என்னலாமோ? எனின், இதற்கு மூன்று வகையாகப் பரிஹாரம்
  அருளிச்செய்கிறார் ‘தெய்வங்களோடு’ என்று தொடங்கி. ‘தெய்வங்களோடு’
  என்றது முதல், ‘இருளுக்கு அஞ்சியும் உறங்காள்’ என்றது முடிய, முதல்
  விடை. “உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்பது, திருவாய். ‘தன்நிலையைக்
  கண்டு அதற்கு’ என்றது முதல், “ஒருசேர எடுத்துப் பேசப்படுகிறதே
  அன்றோ தேவர்களையும்’ என்றது முடிய, இரண்டாவது சமாதானம்.
  தோழிமாரைப் பற்ற இவர்கள் தஞ்சமாகைக்குக் காரணம் என்? என்ன,
  ‘தோழிமாருங்கூட’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
  தோழிகளைக்காட்டிலும் இவர்கள் நெருங்கிய உறவினர் ஆவர்களோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஆயும் அமருலகும்’ என்று
  தொடங்கி. இது, திருவாய். 2. 1 : 1. ‘துன்பம் மிக்கால்’ என்று தொடங்கும்
  வாக்கியம், மூன்றாவது சமாதானம்.