|
க
கின்றிலன்; நம்மைக்
காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை. 1“உலகத்தை எல்லாம் காத்தல்
வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத் திருக்கண் வளர்ந்தருளுகின்றீர்” என்கிறபடியே,
வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாமல் நம்முடைய ரக்ஷண சிந்தனை செய்கிறானித்தனையல்லது, மறந்து உறங்குகின்றானல்லன்
என்பார் ‘உறங்குவான் போல்’ என்கிறார். மேல் உஜ்ஜீவிப்பிக்க இருக்கிற சர்வேச்வரன்,
இவ்வளவிலே தன்படிகளை நினைப்பித்தான். சிறந்த பொழில் குருகூர் - சர்வேச்வரன் ரக்ஷண சிந்தை
செய்துகொண்டு கண் வளர்ந்தருளுகிறபடியை நினைத்து இவர் தரித்தவாறே ஊரும் தரித்தது, ஆதலின்,
‘சிறந்த பொழில் குருகூர்’ என்கிறது. 2பிரிந்த விரஹதாபத்தால் “மரங்களும்
ஸ்ரீ ராமபிரானுடைய பிரிவினாலே உண்டான சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, மலர் அரும்பு இவைகளோடு
கருகி உலர்ந்தன” என்றும், ஸ்ரீ ராமபிரானுடைய வரவு அணித்தாயினவாறே “வழியில் உள்ள எல்லா மரங்களும்
காலமல்லாத காலத்திலும் பழங்களையுடையனவாகவும் தேன்களைச் சிந்துகின்றனவாகவும் ஆயின” என்றும்
சொல்லலாம்படி அன்றோ இருப்பது.
_____________________________________________________
1. “ஸ்ரீரங்கதாமநி. . . .
. ஆர்த்ரயந் (த்வம்) விச்வத்ராண விமர்சன் ஸ்கலி தயா
நித்ராஸி ஜாகர்யயா” இது, ஸ்ரீ ரங்கராஜ
ஸ்தவம், உத்தர சதகம், 75.
நினைப்பித்தான், ஆதலாலே சொல்லுகிறார்.
2. இவர் தரித்தவாறே
ஊரும் தரித்ததற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘பிரிந்த விரஹதாபத்தால்’ என்று தொடங்கி.
“விஷயே தே மஹாராஜ ராமவ்யஸன
கர்ஸதா:
அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:
ஸ்புஷ்பாங்குர கோரகா:”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 :
4.
“அகால பலிநோ வ்ருக்ஷா:
ஸர்வே சாபி மதுஸ்ரவா:
பவந்து மார்க்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 19.
அரிஇனம் சென்ற சென்ற
அடவிக ளனைத்தும் வானம்
சொரிதரு பருவம் போன்று
கிழங்கொடு கனிகாய் துன்றி
விரிபுனன் செழிந்தேன்
மிக்கு விளங்கென விளம்பு கென்றான்
புரியுமா தவனு மஃதே யாகெனப் புகன்
றிட்டானால்.
என்பது, கம்பராமாயணம்.
|