|
ந
நிறம் கிளர்ந்த
அந்தாதி - பண்களிலே கிளர்ந்த அந்தாதி. இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ-இப்
பத்தையும் சொன்னவர்களுக்குப் பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று, “பேர் என்னை
மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவுபடுமது வேண்டா; இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள்.
இப்பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள் புகும் தேசம் பரமபதம் ஆகையாலே ‘வைகுந்தம்
சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம். இத்திருப்பாசுரத்தால் ஒரு பலம்
சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில், பகவத்விஷயத்தில் மூழ்கினவர்களுடைய
பாசுரம் கேட்டவர்களுக்குச், சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் பேறாக நினைத்திருக்கும் தேசத்தின்
சம்பந்தம் தப்பாது என்கை. 1பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய பாசுரம் கேட்டுப்
பொறுக்கமாட்டாதே ஈடுபட்டு இந்தச் சரீரம் நீங்கப் பெற்றவர்கள், அவர்களுக்கு உத்தேஸ்யமான
தேசத்தைக் கிட்டாது ஒழிய விரகு உண்டோ என்பார் ‘எங்ஙனேயோ’ என்கிறார். 2“நீள்
இரவாய் நீண்டதால்”, “ஒண்சுடரோன் வாராது ஒளித்தான்” என்று இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல்
மறைதலில்லாத சூரியனும் மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப்பெறுவர் என்பார் ‘வைகுந்தம்
சேராவாறு’ என்கிறார்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஊர நினைந்தமடல்
ஊரவும்ஒண் ணாதபடி
கூரிருள்சேர் கங்குலுடன்
கூடிநின்று - பேராமல்
தீதுசெய்ய மாறன் திருவுளத்துச்
சென்றதுயர்
ஓதுவது இங்கு எங்ஙனே
யோ.
ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
___________________________________________________
1. “எங்ஙனேயோ” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘பகவானிடத்தில்’
என்று தொடங்கி.
2. “வைகுந்தம்”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நீளிரவாய்’ என்று
தொடங்கி.
|